Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

ராஜன் சொல்லும் 1930 பொருளாதார பேரழிவு என்பது என்ன?

நேற்று முன்தினம் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஒரு கருத்தரங்கில் 1930ல் நடந்த பொருளாதார சீர்குலைவு மீண்டும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறி உள்ளார்.
2008ல் நடந்த பொருளாதார தேக்கத்தை பற்றி 2005லே அனுமானமாக கூறி இருந்தார். இதனால் அவரது கருத்திற்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அவர் சொல்லியவாறு உலக அளவில் விவாதம் நடந்தால் தான் இது தொடர்பான சாத்தியக் கூறுகள் பற்றி அறிய முடியும். ஒரு தனி மனிதனாக இதனை நமது சிந்தனைக்கு அப்பாற்பட்ட விடயமாகவே கருதி கொள்ளலாம். 
ஆனால் இது வரை இத்தகைய பொருளாதார பேரழிவு தொடர்பான அறிகுறிகள் வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கவில்லை என்பது தான் நமக்கு முன்னால் இருக்கிற சாதகமான விடயம்.

நேற்று ரிசர்வ் வங்கி சார்பில் அவரது கருத்துக்கு மறு விளக்கம் கொடுக்கப்பட்டு விட்டது. உலக பொருளாதாரம் அத்தகைய பாதிப்பில் இல்லை, ஆனால் உலக மத்திய வங்கிகள் எடுத்து செல்லும் பொருளாதார கொள்கைகளை மறு சீராய்வு செய்ய வேண்டும் என்ற அர்த்தத்தில் சொல்லி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

என்னவாக இருப்பினும், 1930ல் நடந்த பொருதார பேரழிவு என்பது என்ன என்பதை நாம் அறிந்து கொண்டால் நாமே தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு சுய பரிசோதனையில் ஒப்பிட்டுக் கொள்ள முடியும்.

அதனால் அந்த வரலாற்றைக் கொஞ்சம் திருப்பி பார்ப்போம்.

இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியை எடுத்துக் கொண்டால் உலகின் ஒரு மோசமான சகாபதம் என்றே சொல்லலாம். முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் என்று ஐரோப்பிய நாடுகளின் நாடு பிடிக்கும் கொள்கைக்கு பல அப்பாவி நாடுகளும் இரையாக்கப்பட்ட காலக்க்கட்டம் அது.

அந்த சமயத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு, ஆனால் அதே வேளையில் உலகப்போரினால் ஏற்பட்ட மறைமுக பலன்களை சொகுசாக அமெரிக்கா அனுபவித்துக் கொண்டிருந்தது.

முதல் உலகப்போர் நடக்கும் சமயம் ஐரோப்பாவில் யுத்தம் செய்வதற்கே நேரம் சரியாக இருந்தது. அதனால் தொழில் வளர்ச்சி ஒன்றும் பெரிதாக ஏற்படவில்லை. இந்த சமயத்தில் அமெரிக்கா தான் தனது உற்பத்தி பொருட்களை அங்கு ஏற்றுமதி செய்து கொண்டு இருந்தது. அதனை ஐரோப்பிய நாடுகள் வாங்கி பயன்படுத்திக் கொண்டு இருந்தன.



ஒரு கட்டத்தில் ஐரோப்பியர்களிடம் இருக்கும் காசு கரைந்த பின்னர் அமெரிக்காவே கடனும் கொடுத்தது. அமெரிக்கர்கள் கடன் கொடுக்க  ஐரோப்பியர்கள் அந்த காசை வைத்து மீண்டும் அமெரிக்க பொருட்களை வாங்கி வந்தனர். அதே போல் போருக்கும் பயன்படுத்தி வந்தனர்.

ஆழமாக பார்த்தால் கடன் வாங்கி பொருட்களை ஊக்குவிக்கும் கிரெடிட் கார்டு பொருளாதாரம் தான் இது. ஆனால் அமெரிக்கர்களோ தேவை அதிகரித்து தமது தொழில் தான் பல மடங்கு வளர்கிறது என்ற தவறான எண்ணத்தில் தொழிற்சாலைகளில் பெரிய அளவில் உற்பத்தியை அதிகரித்தனர். ஐரோப்பியர்கள் ஒரு வேளை கடனைத் திருப்பிக் கொடுக்க முடியா விட்டால் என்ன ஆகும் என்பதற்கு தயாராக இருக்கவில்லை.

ஒரு கட்டத்தில் முதலாம் உலகப்போர் முடிய அமெரிக்காவோ தான் கொடுத்த கடனை ஐரோப்பிய நாடுகளிடம் திருப்பி கேட்டது.  ஆனால் ஐரோப்பாவில் சுத்தமாக காசு கிடையாது. கிட்டத்தட்ட எல்லா நாடுகளும் ஜப்தி நிலைக்கு தான் சென்று இருந்தன. அதன் பின் அவர்களிடம் தோற்ற ஜெர்மனியிடம் ஆட்டையை போட்டு ஒரு சிறு பகுதியை திருப்பிக் கொடுக்க முடிந்ததே தவிர மீதியைக் கொடுக்க முடியவில்லை.

இது தவிர அமெரிக்கா கடன் கொடுத்தால் தான் அடுத்தவேளை பொருட்களை ஐரோப்பியர்கள் மீண்டும் அமெரிக்காவிடம் வாங்க முடியும் நிலை. ஆனால் அமெரிக்கா கடன் கொடுப்பதை நிறுத்தியது. இதனால் ஐரோப்பியர்கள் இறக்குமதி செய்து பொருட்கள் வாங்குவது அப்படியே நின்று போனது.

ஆனால் அமெரிக்க நிறுவனங்களோ பொருளாதார வளர்ச்சி என்ற மாயத் தோற்றத்தில் ஏகப்பட்ட பொருட்களை பெரிய அளவில் உற்பத்தி செய்து வைத்து இருந்தனர். இதனை ஏற்றுமதி செய்து காசு பார்க்கலாம் என்றால் திடீர் என்று இறக்குமதி செய்ய ஆள் இல்லை.

சரி உள்நாட்டிலாவது விற்கலாம் என்று நினைத்தால் அங்கு அதை விட மோசமான சூழ்நிலை.



2010களில் கம்பெனிகளின் உரிமையாளர்கள் 75% வளர்ச்சியை சந்தித்து இருந்தனர். ஆனால் அங்கு வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு வெறும் 10% ஊதிய உயர்வை தான் அளித்து இருந்தன. அது அவர்கள் அன்றாட செலவுகளுக்கே சரியாக இருந்த போது புதிதாக ஆடம்பர பொருட்கள் வாங்க கையில் காசில்லை. அதனால் அவர்களும் வாங்குவதை நிறுத்தி விட்டார்கள்.

இன்னும் ஆழமாக பார்த்தால் 0.1% பணக்காரர்கள் நாட்டின் 25% சொத்தை ஆக்கிரமித்து இருந்தனர். இது ஒரு செல்வ சமநிலையின்மையை ஏற்படுத்தி இருந்தது.

இந்திய அம்பானிகள் கவனிக்க வேண்டிய குறிப்பு இது. நாட்டின் வளத்தை சரியாக பகிராவிட்டால் கடைசியில் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருளை அவர்கள் தான் வாங்க வேண்டி இருக்கும்.

இப்படி ஒரு கட்டத்தில் அமெரிக்க நிறுவனங்கள் உற்பத்தி செய்த பொருட்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விலை போகாமல் அப்படியே தொழிற்சாலைகளில் முடங்கின.

அடுத்த பாகத்தில் தொடரும்..

அமெரிக்காவில் இருந்து ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைய முயற்சி செய்த 3 வெளிநாட்டவர்கள் கைது

 

நியூயார்க் நகரின் புரூக்ளின் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைய முயற்சி செய்த 3 வெளிநாட்டவர்களை அப்பகுதி போலீஸார்  கைது செய்தனர்.

அவர்களில் 2 பேர் உஸ்பெகிஸ்தான் நகரை சேர்ந்த அப்துராசுல் ஜுராபோவ் (24) மற்றும் அப்ரோர் ஹபிபோவ் (30) என்று தெரியவந்தது. மேலும், எங்களை சிரியாவிற்கு பயணம் செய்ய அனுமதிக்கவில்லை என்றால்  கொலை செய்துவிடுவோம் என்று அதிகாரிகளை மிரட்டியுள்ளதாகவும் தெரியவந்தது. மற்றொருவர் அஹ்ரோர் சைதாக்மேதோவ் (19) கஜகஸ்தானை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஒபாமாவை கொலை செய்வோம் என்று உறுதிமொழி, ஒரு இணையதளத்தில் உஸ்பெக் மொழியில் வெளியானதை தொடர்ந்து அதில் அவர்கள் போஸ்ட் செய்ததை கண்காணித்து அவர்களை கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல ஆப்கான் பெண்ணுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கியதால் சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான்

 பிரபல ஆப்கான் பெண்ணுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கியதால் சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான்

ஆயிரம் வார்த்தைகள் சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லிவிடும். ஆப்கான் பெண்'(Afghan Girl) என்று பெயரிடப்பட்ட  ஷர்பத் பிபி என்ற பெண்ணின் புகைப்படம் ஜூன்,1985 ஆம் ஆண்டு ‘நேஷனல் ஜியோக்ரபி இதழில் அட்டைப் படமாக வெளிவந்து உலகப் புகழ்பெற்றது.

இப்படம் 1980 இல் ஆப்கானிஸ்தான் நிலை மற்றும் உலக முழுவதுமிருக்கும் அகதிகளின் நிலையை வெளிப்படுத்துவதாக இருந்தது. அவளின் பச்சை நிறக் கண்களும் அது சொன்ன செய்தியும் உலகத்தை கவனிக்க வைத்தது.

அந்த கண்களுக்குப் பின்னே உறைந்துகிடந்த துயரம் அன்றைய ஆப்கானின் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. “ஆப்கன் மோனலிஷா” என்று இப்பெண்ணை அழைக்கக் காரணமாக இருந்த இப் புகைப்படத்தை எடுத்தவர் ‘ஸ்டீவ் மெக்கரி’ எனும் புகழ்பெற்ற நேஷனல் ஜியோக்ரபி புகைப்படக்காரர் ஆவார்.

அந்த பெண்ணின் பெயர் ஷர்பத் பிபி இவர் தோரா போரா மலைப்பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. சோவியத் – ஆப்கான் போரின் போது தன் ஆறு வயதில் சோவியத்தின் குண்டுகளுக்கு தன் பெற்றோர்களைப் பலி கொடுத்துவிட்டு, தன் சகோதரன் மற்றும் இரண்டு சகோதரிகளோடு உயிர் பிழைக்க பனி மலைகளைக் கடந்து எல்லைதாண்டி பாகிஸ்தான் முகாம்களில் அடைகலம் அடைந்தவர்.

இவர் தற்போது ரஹ்மத் குல் என்பவரை திருமணம் செய்துள்ளார்.  2002 இல் புகைப்படக் கலைஞர் ‘ஸ்டீவ் மெக்கரி’ அந்தப் பெண்ணைத் தேடி கண்டு பிடித்து மீண்டும் புகைப்படம் எடுத்தார்.

இந்த ஆப்கான் பெண்ணிற்கு தற்போது பாகிஸ்தான் அரசு தேசிய அடையாள அட்டை வழங்கி உள்ளது. ஷர்பத், அவரது கணவர் ரஹ்மத், ஷர்பத்தின் மகன்கள் வலிகான், ரவுப்கான் ஆகியோருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கியுள்ளது.

F9D31C3C-12A0-4089-82CD-FB5BA0E9C473_L_styvpf
இது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற ஆப்கானிஸ்தான் பெண்ணுக்கு எவ்வாறு பாகிஸ்தானில் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது என சர்ச்சை வெடித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை மனுவில் ஷர்பத் பெசாவரில் பிறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் போலியாகத் தரப்பட்டு அவருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் தேசிய தகவல் மற்றும் பதிவு அதிகாரிகள் 4 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஷர்பத் குடும்பத்தினரின் அடையாள அட்டைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

afghan girl

காதலுக்கு எதிர்ப்பு... மகளை 6 வருடம் வீட்டுக்குள் சிறை வைத்து மன நோயாளியாக்கிய கொடூர பெற்றோர்!

காதலுக்கு எதிர்ப்பு... மகளை 6 வருடம் வீட்டுக்குள் சிறை வைத்து மன நோயாளியாக்கிய கொடூர பெற்றோர்! 
சீனாவில் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெற்ற மகளையே ஆறு ஆண்டுகள் வீட்டுக்குள்ளேயே பெற்றோர் சிறை வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர் சாங் குய் என்ற இளம்பெண். கடந்த 2009ம் ஆண்டு சாங் குய் இளைஞர் ஒருவரைக் காதலிப்பது அவரது பெற்றோருக்குத் தெரிய வந்தது. 
 
மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், சாங்கை சுதந்திரமாக வெளியில் விட்டால் அவர் காதலனுடன் சென்று விடுவார் என அஞ்சினர். காதலுக்கு எதிர்ப்பு... மகளை 6 வருடம் வீட்டுக்குள் சிறை வைத்து மன நோயாளியாக்கிய கொடூர பெற்றோர்! இதனால், அவர்கள் சாங்கை வீட்டுச் சிறையில் அடைத்தனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மகளை பற்றி கேட்ட போது, அவளுக்கு மனநிலை சரியில்லை, ஆகையால் அவளைப் பாதுகாக்கவே தனியறையில் அடைத்து வைத்துள்ளதாக மழுப்பி வந்துள்ளனர். 
 
இந்நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சாங்கின் நிலையை சோ ஜென் என்ற 50 முதியவர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். சாங்கைப் பெற்றோர் வீட்டுச் சிறையில் அடைத்திருப்பது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
 
 மேலும், பரிதாபகரமான நிலையில் சாங் படுத்திருப்பது போன்ற புகைப்படங்களை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சோ ஜென் கூறுகையில், ‘அப்பெண்ணின் பெற்றோர் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். ஆகையால் அங்குள்ள யாரும் இவ்விவகாரத்தில் தலையிடக்கூடாது என மிரட்டப்பட்டனர். 
 
அப்பெண் வீட்டிற்குள் இருப்பது பல காலமாகவே அனைவருக்கும் தெரியும். நான் வெளியூரில் வசிக்கிறேன். எப்போதாவது தான் இங்கு வருவேன். எனவே யாருடையை மிரட்டலுக்கும் நான் பயப்படமாட்டேன். 
 
ஒவ்வொரு புது வருடத்தன்றும் அப்பெண்ணை நான் ரகசியமாக சந்திப்பேன். அவ்வாறு சமீபத்தில் அப்பெண்ணை நான் சந்தித்த போது, எனது கண்கள் குளமானது. 
 
வைக்கோல் பொதிகளுக்கு நடுவே போர்வையால் சுற்றப்பட்டு அவள் படுக்கையில் கிடந்தாள். அவளை சுற்றி உணவு சிதறிக்கிடந்தது. அப்போது தான் அவள் துன்பப்பட்டது எல்லாம் போதும் என்று நினைத்தேன். 
 
அப்பெண்ணின் நிலையை புகைப்படமாக எடுத்தேன். பெரும் வருத்தத்தில் இருந்த நான் போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்தேன். பின்னர் அப்புகைப்படங்களை ஆன்-லைனில் வெளியிட்டேன்' எனத் தெரிவித்துள்ளார். பெற்றோரே இவ்வாறு மகளை வீட்டுக்குள் சிறை வைத்து கொடுமைப் படுத்திய சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பனிக்குடத்துடன் பிறந்த குழந்தை: மருத்துவ உலகில் அதிசயம் (வீடியோ இணைப்பு)



அமெரிக்காவில் ஆண் குழந்தை ஒன்று பனிக்குடத்துடன் பிறந்துள்ளது மருத்துவ உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் செல்சீ. 7 மாத கர்ப்பிணியாக இருந்த அவர்செடார்ஸ்-சினாய் மெடிக்கல் சென்டரில் அனுமதிக்கப்பட்டார்.

அறுவை சிகிச்சை மூலம் குறை மாதத்தில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் குழந்தை பனிக்குடம் உடையாமலேயே பிறந்துள்ளது.
80,000 குழந்தைகளில் ஒன்றுதான் பனிக்குடத்துடன் பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பனிக்குடத்துக்குள் கை, கால்களை மடக்கி குழந்தை இருந்ததை பார்க்கவே வியப்பாக இருந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

6 வருடங்களின் பின்னர் தோன்றும் அபூர்வ சூரியகிரகணம்: பகல் வேளையை இரவு ஆக்கிரமிக்கவுள்ளது


16 வருடங்களின் பின்னர் தோன்றும் அபூர்வ சூரியகிரகணம்: பகல் வேளையை இரவு ஆக்கிரமிக்கவுள்ளது
அபூர்வமானதொரு சூரிய கிரகணம் வரும் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர்.

இதுபோன்ற சூரிய கிரகணம் ஒன்று 1999 ஆம் ஆண்டிலேயே இறுதியாக நடந்துள்ளது. 16 வருடங்கள் கழித்து அது தற்போது நிகழவுள்ளது.
வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி பகல் வேளையை இரவு ஆக்கிரமிக்கவுள்ளது. இது சிலவேளை 90 நிமிடங்கள் நீடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஐரோப்பாவைப் பொறுத்தவரை சுமார் 84 சதவீதமான சூரிய ஒளி மறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் வடக்கு நோர்வே மற்றும் பரோயே தீவுகளில் முழு சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது.

மீண்டும் இதுபோன்ற ஒரு சூரிய கிரகணம் 2026 ஆம் ஆண்டில் தான் வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

20 வருடங்களாக ஒரே தியேட்டரில் ஓடிய ஷாருக்கான் படம் இன்று இறுதிக் காட்சி

20 வருடங்களாக ஒரே தியேட்டரில் ஓடிய ஷாருக்கான் படம் இன்று இறுதிக் காட்சிஉலகின் எந்த மொழி திரைப்படமும் இதுவரை சாதித்திராத, இனியும் சாதிக்க முடியாத ஒரு உச்ச கட்ட சாதனை ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ என்ற திரைப்படம் செய்துள்ளது. திரையரங்கில் 3 வாரம் ஓடினாலே வெற்றி நடை போடுவதாக சொல்லப்படும் இந்தக் காலத்தில் 1009 வாரமாக ஒரு திரைப்படம் ஒரே திரையரங்கில் திரையிடப்படுவது வெறும் சாதனை அல்ல. அதுக்கும் மேல....

ஷாருக்கான், கஜோல் நடிப்பில், கடந்த 1995-ம் வருடம், அக்டோபர் மாதம் வெளியான இந்தி படம் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே. இத்திரைப்படம் வெளியான நாளிலிருந்து சுமார் 20 வருடங்களாக மும்பையிலுள்ள ‘மராத்தா மந்திர்’ என்ற தியேட்டரில் தினமும் காலை 11-30 காட்சியாக தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம் 12-ம் தேதி தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தின் 1000-மாவது காட்சி இந்த திரையரங்கில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட நிலையில் புதிதாக வெளியாகும் திரைப்படங்களை சரியாகத் திரையிடமுடியாத காரணங்களால் இன்று காலையே திரைப்படத்தின் கடைசி காட்சி என்று திரையரங்க நிர்வாகம் அறிவித்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரியக்காட்சியை 210 ரசிகர்கள் கண்டு களித்தனர்.

20 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து தினமும் ஷாருக்-கஜோலின் காதலை சலிக்காமல் ரசித்து வந்த பல ரசிகர்கள் இனி இந்த  திரைப்படத்தை இந்த தியேட்டரில் காண முடியாது என்பதால் ஏக்கமடைந்துள்ளனர். உலகின் எந்த மொழி திரைப்படமும் இதுவரை சாதித்திராத, இனியும் சாதிக்க முடியாத ஒரு உச்ச கட்ட சாதனை ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ என்ற திரைப்படம் செய்துள்ளது. திரையரங்கில் 3 வாரம் ஓடினாலே வெற்றி நடை போடுவதாக சொல்லப்படும் இந்தக் காலத்தில் 1009 வாரமாக ஒரு திரைப்படம் ஒரே திரையரங்கில் திரையிடப்படுவது வெறும் சாதனை அல்ல. அதுக்கும் மேல....

ஷாருக்கான், கஜோல் நடிப்பில், கடந்த 1995-ம் வருடம், அக்டோபர் மாதம் வெளியான இந்தி படம் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே. இத்திரைப்படம் வெளியான நாளிலிருந்து சுமார் 20 வருடங்களாக மும்பையிலுள்ள ‘மராத்தா மந்திர்’ என்ற தியேட்டரில் தினமும் காலை 11-30 காட்சியாக தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம் 12-ம் தேதி தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தின் 1000-மாவது காட்சி இந்த திரையரங்கில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட நிலையில் புதிதாக வெளியாகும் திரைப்படங்களை சரியாகத் திரையிடமுடியாத காரணங்களால் இன்று காலையே திரைப்படத்தின் கடைசி காட்சி என்று திரையரங்க நிர்வாகம் அறிவித்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரியக்காட்சியை 210 ரசிகர்கள் கண்டு களித்தனர்.

20 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து தினமும் ஷாருக்-கஜோலின் காதலை சலிக்காமல் ரசித்து வந்த பல ரசிகர்கள் இனி இந்த  திரைப்படத்தை இந்த தியேட்டரில் காண முடியாது என்பதால் ஏக்கமடைந்துள்ளனர். உலகின் எந்த மொழி திரைப்படமும் இதுவரை சாதித்திராத, இனியும் சாதிக்க முடியாத ஒரு உச்ச கட்ட சாதனை ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ என்ற திரைப்படம் செய்துள்ளது. திரையரங்கில் 3 வாரம் ஓடினாலே வெற்றி நடை போடுவதாக சொல்லப்படும் இந்தக் காலத்தில் 1009 வாரமாக ஒரு திரைப்படம் ஒரே திரையரங்கில் திரையிடப்படுவது வெறும் சாதனை அல்ல. அதுக்கும் மேல....

ஷாருக்கான், கஜோல் நடிப்பில், கடந்த 1995-ம் வருடம், அக்டோபர் மாதம் வெளியான இந்தி படம் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே. இத்திரைப்படம் வெளியான நாளிலிருந்து சுமார் 20 வருடங்களாக மும்பையிலுள்ள ‘மராத்தா மந்திர்’ என்ற தியேட்டரில் தினமும் காலை 11-30 காட்சியாக தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம் 12-ம் தேதி தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தின் 1000-மாவது காட்சி இந்த திரையரங்கில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட நிலையில் புதிதாக வெளியாகும் திரைப்படங்களை சரியாகத் திரையிடமுடியாத காரணங்களால் இன்று காலையே திரைப்படத்தின் கடைசி காட்சி என்று திரையரங்க நிர்வாகம் அறிவித்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரியக்காட்சியை 210 ரசிகர்கள் கண்டு களித்தனர்.

20 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து தினமும் ஷாருக்-கஜோலின் காதலை சலிக்காமல் ரசித்து வந்த பல ரசிகர்கள் இனி இந்த  திரைப்படத்தை இந்த தியேட்டரில் காண முடியாது என்பதால் ஏக்கமடைந்துள்ளனர்.

அப்பாவி மக்களை கொலை செய்து உடல் உறுப்புகளை விற்று நிதி திரட்டும் ஐ.எஸ். தீவிரவாதிகள்

அப்பாவி மக்களை கொலை செய்து உடல் உறுப்புகளை விற்று நிதி திரட்டும் ஐ.எஸ். தீவிரவாதிகள்பாக்தாத், பிப். 19–

ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ். தீவிரவாதிகள் இஸ்லாமிய தேசம் என்ற நாட்டை உருவாக்கி உள்ளனர். அங்கு வசிக்கும் மாற்று மதத்தினரையும், ஷியா முஸ்லிம்களையும் கொடூரமாக கொன்று குவித்து வருகிறார்கள்.

அவர்கள், தங்கள் இயக்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக அப்பாவி மக்களை கொன்று அவர்களின் கிட்னி போன்ற உள்உறுப்புகளை திருடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகலை ஐக்கிய நாட்டு சபைக்கான ஈராக் தூதர் நிக்கோலாய் மல்தனோவ் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட உடல்களை சேகரித்து பரிசோதனை செய்தபோது உடலில் இருந்த கிட்னி மற்றும் உடல் உறுப்புகள் காணாமல் போய் இருந்தன. இவற்றை விற்று ஐ.எஸ். தீவிரவாதிகள் பணம் திரட்டுவதாக தூதர் கூறினார்.

ஐ.எஸ். தீவிரவாதிகள் மொசூல் நகரை கைப்பற்றும் போது அங்கு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றிய ஏராளமான டாக்டர்களை கடத்தி சென்றனர். அவர்களை வைத்து மனித உறுப்புகளை அறுவை செய்து எடுப்பதாக தெரிகிறது.

ISIS இன் பிடியில் இருந்த அமெரிக்கப் பெண்மணி கைலா ஜீன் முல்லர் கொலை உறுதியானது!

சிரியாவில் ISIS போராளிக் குழுவால் கடந்த 1 1/2 வருடங்களாகப் பிணைக் கைதியாகப் பிடித்து வைக்கப் பட்டிருந்த 26 வயதாகும் அமெரிக்காவின் தொண்டு நிறுவன ஊழியரான கைலா ஜீன் முல்லர் என்ற பெண்மணி சமீபத்தில் கொல்லப் பட்டுள்ளார் என்பதை அமெரிக்க அதிபர் ஒபாமாவும் முல்லரின் குடும்பத்தினரும் உறுதிப் படுத்தியுள்ளனர்.





மேலும் இத்தகவலை அறிந்து தமது இதயம் சுக்கு நூறாக உடைந்து விட்டதாகவும் மிக இளம் வயதில் தனது உயிரை உலகில் சுதந்திரம், நீதி மற்றும் சமாதானம் என்பவை தேவைப் படும் மக்களுக்காகத் தமது மகள் அளித்துள்ளார் எனவும் முல்லரின் குடும்பத்தினர் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர். முன்னர் வெள்ளிக்கிழமை கைலா ஜீன் முல்லர் ரக்கா நகரில் ஜோர்டானின் விமானத் தாக்குதலிலேயே கொல்லப் பட்டார் என ISIS தெரிவித்திருந்த போதும் அதற்கான சான்றை தெரியப் படுத்தவில்லை. 

இந்நிலையில் கடந்த வார இறுதியில் முல்லரின் குடும்பத்துக்கு ISIS அனுப்பியிருந்த தனிப்பட்ட செய்தியில் அவர் கொல்லப் பட்டு விட்டார் என அறிவித்து இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால் அவர் எப்போது எப்படி கொல்லப் பட்டார் என்பது அறிவிக்கப் படவில்லை. ஆனால் இத்தகவலை அதிபர் ஒபாமாவும் உறுதிப் படுத்தியிருப்பதுடன் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் கைலா ஜீன் முல்லரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதேவேளை கடந்த வருடம் முல்லர் பிணைக் கைதியாகக் கைப்பற்றப் பட்ட பின் தனது குடும்பத்தினருக்கு சிரியாவில் இருந்து வரைந்த கடிதத்தை அவரது உறவினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். அதில் கைலா ஜீன் முல்லர் தான் பிணைக் கைதியாகப் பிடித்து வைக்கப் பட்டுள்ளதைத் தெரியப் படுத்தியுள்ளதுடன் மேலும் தான் பாதுகாப்பான ஓரிடத்தில் தங்க வைக்கப் பட்டிருப்பதாகவும் தன்னை யாரும் எக்காரணத்துக்காகவும் துன்புறுத்தவில்லை எனவும் தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தான் மிக மரியாதையாகவும் அன்பாகவும் கவனிக்கப் பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கைலா ஜீன் முல்லர் இந்தியா, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளில் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார் என்பதுடன் எயிட்ஸ் நோய் சிகிச்சை மையங்கள் மற்றும் அரிஷோனாவிலுள்ள மகளிர் புகலிடம் ஒன்றிலும் பணியாற்றி உள்ளார்.

விகாரமாக இருந்த மைக்கேல் ஜாக்சன் வியாபாரப் பொருளாக மாறியது எப்படி? - வியப்பூட்டும் புதிய தகவல்கள்



மைக்கேல் ஜாக்சன் என்ற பெயரைக் கேட்டதும் சுருள் சுருளாய் நெற்றியின் முன் விழும் முடியும், பெண்மை கலந்த அந்த வசீகர முகமும்தான் ரசிகர்களின் மனதில் தோன்றும். ஆனால், அந்த முகத்திற்காகத்தான் அவர் தன் வாழ்நாள் முழுக்க வலியை அனுபவித்து, இறுதியில் அந்த வலியாலே இறந்தும் போனார்.

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அவர் இந்த சிகிச்சை செய்யாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பாரென்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் வியப்பூட்டும் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

அவர் மேற்கொண்ட சிகிச்சைகள்:

1977 - மைக்கேலுக்கு 19 வயது, அந்தக் காலம் பற்றி கூறும் ஜாக்சன் ‘அப்போது எனக்கு முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தது. இதனால் தினமும் நான் அழுவேன்’ என்பார். மேலும் தனது மூக்கு பெரிதாக இருப்பதால் அதை சிறியதாக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அது சரியாக அமையாததால் இரண்டாவது முறையாக மற்றொரு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் சுவாசக் கோளாறால் அவதிப்பட்டார்.

1983 - ‘த்ரில்லர்’ ஆல்பம் பிரபலமாகி மைக்கேல் புகழின் உச்சியில் இருந்த காலம். கண் புருவத்தை திருத்திக் கொண்டார். கன்னங்களை புஷ்டியாகக் காட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மேலும் மூன்றாவது முறையாக மூக்கிலும் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

1991 - மைக்கேல் தனது 33 ஆவது வயதில் தனிமையான வாழ்க்கை வாழ்ந்தார். 4 ஆவது மற்றும் 5 ஆவது அறுவை சிகிச்சை முடிந்து கன்னத்தில் செய்யப்பட்ட இம்ப்ளாண்ட் சிகிச்சையால் முகம் வெள்ளையாக மாறத் தொடங்கியது.

1995 - தன் நண்பரும் தோல் சிகிச்சை நிபுணருமான யூரி கெல்லர் மூலம் தோலை ப்ளீச்சிங் செய்து கொண்டார். அவர் மைக்கேல் ஜாக்சனிடம், ஏன் உன் உருவத்தை அடிக்கடி மாற்றிக் கொள்கிறாய் என்று கேட்டதற்கு “நான் என் அப்பாவைப் போல தோற்றமளிக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.

2002 -  மூக்கில் அறுவை சிகிச்சை செய்த இடத்திலிருந்து திரவம் ஒன்று வடிந்து கொண்டே இருக்கும். இதனால் எப்போதும் மூக்கு துவாரங்களை மூடிய படியே இருப்பார்.

2003 - பெண்மைத் தன்மையுள்ளவராக அவரது முகம் மாறியது. அவரைப் பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் “நேர்மையாகச் சொல்கிறேன் நான் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி எதுவும் செய்து கொள்ளவில்லை. எனக்குத் தோலில் ஒரு வித நோய் இருக்கிறது. அதுதான் இந்த நிற மாற்றத்திற்குக் காரணம். சுவாசப் பிரச்சனைகளுக்காகத்தான் மூக்கில் அறுவை சிகிச்சை மேற்கொண்டேன்” என்றார்.

2009- ஐம்பது வயதான ஜாக்சன் 305 மில்லியன் பவுண்ட் கடன் காரணமாக ‘திஸ் இஸ் இட்’ என்ற தனது உலக சுற்றுப் பயணத்தை அறிவித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். சூம்பிப் போன அவரது மூக்கை பில்லர்களை (சதையை ஒட்டி, நீக்க பயன்படும் சிகிச்சைக்கருவி) வைத்து மீண்டும் கட்டமைத்தார் மருத்துவர். மூக்கு மற்றும் முகத்தையும் சீரமைத்தார். திடீர் மாரடைப்பு காரணமாக, ஜூன் 26-ந் தேதி அதிகாலை லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சன், நினைவு திரும்பாமலேயே மரணத்தை தழுவினார்.

உலகெங்கும் இன்றளவும் அதிக அளவில் விற்கும் இசை ஆல்பங்கள் அவருடையதுதான். 13 கிராமி விருதுகள், 75 கோடி ஆல்ப கேசட்டுகள் விற்பனை என்று பில்லியன் கணக்கில் வருமானம். நாடு- மொழி-இனம் என்ற உணர்வுகளைக் கடந்து கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர் ஜாக்சன். அவரது சாதனை எண்ணிலடங்காது.

இந்த உலகமே அழிந்தாலும், பிரபஞ்சத்தில் வீசும் காற்றில் இசை நிறைந்திருக்கும். அப்போதும் கேட்கும் ‘ஜஸ்ட் பீட் இட்’ என்று துள்ளலான மைகேல் ஜாக்சனின் குரல்.

சிறுவனின் விளையாட்டு விபரீதமானது: வணிக வளாகத்தில் தீப்பிடித்து 17 பேர் பலியான சோகம்

சிறுவனின் விளையாட்டு விபரீதமானது: வணிக வளாகத்தில் தீப்பிடித்து 17 பேர் பலியான சோகம்பெய்ஜிங், பிப். 6-

சீனாவில் உள்ள வணிக வளாகத்தில் 9 வயது சிறுவன் லைட்டரை வைத்து விளையாடியபோது ஏற்பட்ட தீயால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

குவாங்டாங் மாகாணம், ஹூயிங்டாங் கவுண்டியில் உள்ள வணிக வளாகத்தின் 4-வது மாடியில் ஒரு குடோன் உள்ளது. அங்கு பெற்றோருடன் வந்திருந்த 9 வயது சிறுவன், தனது கையில் உள்ள லைட்டரில் இருந்து நெருப்பை வரவழைத்து விளையாடியிருக்கிறான். அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் உள்ள ஒரு பொருள் மீது விழுந்து தீப்பிடித்தது.

அது எளிதில் தீப்பற்றும் பொருள் என்பதால் விரைவாக பற்றி எரிந்ததுடன், அந்த தளம் முழுவதும் பரவியது. இதுபற்றி தகவல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக 45 வாகனங்களில் 270 வீரர்கள் விரைந்து வந்து கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த விபத்தில் 17 பேர் உடல் கருகி இறந்தனர். 4 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். தீ விபத்துக்கு காரணமான 9 வயது சிறுவன் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான். மேலும் அந்த அங்காடியின் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஈராக்கில் குழந்தைகளை உயிரோடு புதைத்து கொல்லும் ஐ.எஸ். தீவிரவாதிகள்: ஐ.நா. அதிர்ச்சி தகவல்

ஜெனீவா, பிப். 6–
ஈராக்கில் குழந்தைகளை உயிரோடு புதைத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்வதாக ஐ.நா. அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கு வாழும் மைனாரிட்டிகளான யாஷிடி மற்றும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களது குழந்தைகளையும், சிறுவர், சிறுமிகளையும் கடத்தி கொன்று விடுகின்றனர்.
ஈராக்கில் குழந்தைகளை உயிரோடு புதைத்து கொல்லும் ஐ.எஸ். தீவிரவாதிகள்: ஐ.நா. அதிர்ச்சி தகவல்அவர்களில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை தற்கொலை படைக்கு மனித குண்டுகளாக பயன்படுத்துகின்றனர். வெடிகுண்டு தயாரிக்கவும், அமெரிக்க குண்டு வீச்சில் இருந்து தப்பிக்க மனித கேடயமாகவும் உபயோகிக்கின்றனர்.
பெண்கள் மற்றும் சிறுமிகளை மார்க்கெட்டுகளில் ‘செக்ஸ்’ அடிமைகளாக விற்பனை செய்கின்றனர். குண்டு வீச்சில் சிக்கி படுகாயம் அடைந்து எதற்கும் பயன்படாத குழந்தைகளை சிலுவையில் அறைந்தும், மண்ணில் உயிருடன் புதைத்தும் கொடூரமாக கொலை செய்கின்றனர்.
மேலும் அவர்களை பட்டினி போட்டும், தண்ணீர் தராமலும் கொல்கின்றனர். இந்த தகவலை ஐ.நா. சபையின் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ஐ.என்.டி. நம்பர் பிளேட்டுகளை வாகனங்களில் பயன்படுத்தினால் திங்கள் முதல் அபராதம்: தமிழக போலீஸ்

சென்னை, பிப்.6-

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட, 'ஐ.என்.டி' என்ற, உயர் பாதுகாப்பு பதிவு எண் நம்பர் பிளேட், தமிழகத்தில் இன்னும் அமலுக்கு வரவில்லை. எனவே, இந்த வகை நம்பர் பிளேட்டை பொருத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக போக்குவரத்து மற்றும் காவல் துறை அறிவித்துள்ளது.

அனைத்து வாகனங்களிலும், உயர் பாதுகாப்பு பதிவு எண் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் என, கடந்த 2011ல், மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை தமிழக அரசு இன்னும் அமல்படுத்தவில்லை. அதே சமயம் வேறு சில மாநிலங்கள் ஐ.என்.டி. நம்பர் பிளேட் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் போலி  ஐ.என்.டி. நம்பர் பிளேட்டுகள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த வாரம் இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் போலி நம்பர் பிளேட் தொடர்பாக விசாரிக்குமாறு கோயம்புத்தூர் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஐ.என்.டி. நம்பர் பிளேட்டுகள் உபயோகிக்கக்கூடாதென்று தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் காவல் துறை அறிவித்துள்ளது.

தற்போது மாநில காவல்துறை, இது போன்ற நம்பர் பிளேட் வைத்திருப்பவர்களிடம் அதை மாற்றி விட்டு கோர்ட் உத்தரவுப்படி பழைய மாடல் நம்பர் பிளேட்டுகளை உபயோகப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தி வருகிறது. இதையடுத்து வரும் திங்கள் முதல் ஐ.என்.டி. நம்பர் பிளேட்டுகளை உபயோகிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நம்பர் பிளேட்டில், எழுத்து, எண் வடிவங்கள் ஒரே சீராகவும், வாகன இன்ஜின் எண், வாகன உரிமையாளர்கள் விவரங்கள் அடங்கிய, 'ஹாலோகிராம்' முத்திரை இடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானிய பிணைக் கைதி கென்ஜி கோட்டோ தலையை துண்டித்தது ஐ.எஸ்.



ஜப்பானிய பிணைக் கைதி கென்ஜி கோட்டோ தலையை துண்டித்தது ஐ.எஸ். | படம்: ஏபி



பிணைக் கைதியாக வைத்திருந்த இரண்டாவது ஜப்பானியர் கென்ஜி கோட்டோவில் தலையை ஐ.எஸ். தீவிரவாதிகள் துண்டித்தனர்.
இது முழுக்க முழுக்க குரூரமானது என்றும், மன்னிக்க முடியாத தீவிரவாத செயல் என்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே தெரிவித்துள்ளார்.
இராக் மற்றும் சிரியாவின் குறிப்பிட்ட பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி இஸ்லாமிய தேசத்தை அறிவித்துள்ளனர். இராக் தலைநகர் பாக்தாத் நோக்கி முன்னேறி வந்த அவர்களை பன்னாட்டு ராணுவத்தினர் தடுத்து நிறுத்தி பின்வாங்க செய்துள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்கும் வகையில் அவர்களின் முகாம்கள் மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடந்த சில மாதங்களாக வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.
இதற்கு பழிவாங்கும் வகையில் தங்கள் பிடியில் உள்ள மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பிணைக்கைதிகளின் தலையை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் இணையதளத்தில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதுவரை அமெரிக்காவைச் சேர்ந்த 3 பேர், பிரிட்டனைச் சேர்ந்த 2 பேர் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்துள்ளனர்.
இதனிடையே, ஐப்பானைச் சேர்ந்த கென்ஜி கோட்டோ ஜோகோ, ஹருனா யுகாவா ஆகிய இரண்டு பிணைக் கைதிகளைக் கொல்வோம் என்று ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்திருந்தது. இதில் கென்ஜி கோட்டோ ஜோகோ பத்திரிகை நிருபர். ஹருணா யுகாவா சிரியாவுக்கு சுற்றுலா சென்றவர். இருவரையும் கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
இவர்களில் ஹருணா யுகாவாவை கடந்த வாரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்றனர். பின்னர், ஜோர்தான் நாட்டு சிறையில் இருக்கும் தங்கள் சகோதரி சாஜிதா அல் ரிஷவாய் என்பவரை விடுவித்தால் இன்னொரு ஜப்பானியரான கென்ஜி கோட்டோ விடுவிக்கப்படுவார் என்று தீவிரவாதிகள் நிபந்தனை விதித்து காலக் கெடுவும் விதித்தனர்.
அந்தக் காலக்கெடு முடிவடைந்த நிலையில், அவரைக் கொலை செய்து அதுதொடர்பான வீடியோ பதிவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.
தங்கள் நாட்டு பிணைக் கைதிகளை விடுவிக்க ஜப்பான் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவில்லை.
கைதிகள் பரிமாற்றம் குறித்து நல்லதொரு முடிவை ஜப்பானும் ஜோர்தானும் தேர்வு செய்ய வேண்டும் என்று ஜப்பான் பிணைக் கைதியின் குடும்பம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நாயகனாக அறிமுகமாகும் 'சகாப்தம்' ட்ரெய்லர்

179 வயது மனிதர் வாரணாசியில் வாழ்வதாக தகவல்?







வாரணாசி: வாரணாசியில் 179 வயதுள்ள உலகிலேயே மிக அதிகமான வயதுடைய ஒரு மனிதர் வாழ்கிறார் என்ற தகவல் ஆச்சரியப்பட வைக்கிறது. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கும் வாரணாசியில் வாழ்ந்து வரும் மகாஸ்தா முராசி தம்முடைய பிறந்த ஆண்டு 1835 என்கிறார். பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் கி.பி. 1903 ஆம் ஆண்டு முதல் வாரணாசியில் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.

1957 ஆம் ஆண்டு வரை காலணி தைப்பவராக அதாவது 122 வயது வரையில் அந்தப் பணியை செய்துவிட்டு ஓய்வு பெற்றுவிட்டார். மகாஸ்தா முராசியின் பிறப்ப்பு சான்றிதழ், அடையாள அட்டைகள் அனைத்துமே அவர் 1835ஆம் ஆண்டு பிறந்தவர்தான் என்கின்றன. ஆனால் இதுவரை இவர் 179 வயதுக்காரர் என்பதை உறுதிப்படுத்த எந்த ஒரு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோயில் எங்கேயிருக்கிறது????


இந்தக் கோயில் எங்கேயிருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களோ தெரியாது.
ஆப்பிரிக்க கிழக்குக் கரையோரச் சமுத்திரத் தீவான மொரிசியசு என்னும் நாட்டில்.
மொரிசியசில் பிரெஞ்சுக்காரர்கள் குடியேறிய 1721ஆம் ஆண்டளவில் தமிழர்கள் பயிற்சி பெற்ற
தொழிலாளர்களாகவும் வெள்ளைகாரர்களின்
பிள்ளைகளுக்கு ஆசிரியர்களாகவும்
வந்துசேர்ந்தார்கள். ஏனைய இந்தியக்
குடியேற்றவாசிகள் போன்றே தமிழர்களும் புத்திசீவிகளாகவும் வணிகர்களாகவும் சிறந்து விளங்குகிறார்கள்.

இவர்கள் மத்தியில் கொடை வள்ளல்களுக்கும்
குறைவில்லை என்பதையும்
இங்கே குறிப்பிடுவது அவசியமாகும்.
இயலாதவர்களுக்கு உதவுவதில் அரசாங்கத்தையும்
தட்டிக்கேட்கவும் இவர்கள் தயங்குவதில்லை.
இங்கு தமிழும் சைவமும்
தளைத்தோங்குவதை இவர்கள் பெருமையுடன்
இன்றும் கூறுகிறார்கள்.
கோயில் திருவிழாக்களில் காவடியும் தீமிதிப்பும் தமிழ்
நாட்டிலும் ஈழத்திலும் நடைபெறுவதுபொலவே இங்கும்
நடைபெறுகின்றன. முதலில் 1850 இல் Terre Rouge என்னுமிடத்தில் தமிழ் செல்வந்தர்களால் ஸ்ரீ
கிருஷ்ணமூர்த்தி துரோபதை அம்மன் கோயில்
நிர்மாணிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து லூயிஸ்
துறையில் ஸ்ரீ சொக்கலிங்க மீனாட்சி அம்மன்
கோயிலும் கிளெமென்சியாவில்
அருள்மிகு பாலதந்தை கோயிலும் Plaines des Roches
என்னும் நகரில் சிவ சுப்பிரமணியன் கோயிலும்
நிர்மாணிக்கப்பட்டன.
இக்கோயில் நிர்மாணிப்புப் பணிகளில்
காலத்துக்குக் காலம் வந்த தமிழக அரசாங்கங்கள்
எண்ணற்ற உதவிகளைக் கொடுத்துதவின என்பதையும்
இங்கு நான் நன்றியுடன் குறிப்பிட
விரும்புகிறேன்.
சமயமே தமிழர்களை இணைப்பதும்
ஒற்றுமைப்படுத்துவதுமான சக்தியென இவர்கள்
உறுதியாக நம்புகிறார்கள்.
எமது கண்ணுக்கு எட்டாத தூரத்திலிருக்கும் இந்த
உடன்பிறப்புகளின் வாழ்வில் சுகமும் செல்வமும்
சகோதரத்துவமும் வளர வாழ்த்துவோம்!
இந்தக் கோயில் எங்கேயிருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களோ தெரியாது.
ஆப்பிரிக்க கிழக்குக் கரையோரச் சமுத்திரத் தீவான மொரிசியசு என்னும் நாட்டில்.
மொரிசியசில் பிரெஞ்சுக்காரர்கள் குடியேறிய 1721ஆம் ஆண்டளவில் தமிழர்கள் பயிற்சி பெற்ற
தொழிலாளர்களாகவும் வெள்ளைகாரர்களின்
பிள்ளைகளுக்கு ஆசிரியர்களாகவும்
வந்துசேர்ந்தார்கள். ஏனைய இந்தியக்
குடியேற்றவாசிகள் போன்றே தமிழர்களும் புத்திசீவிகளாகவும் வணிகர்களாகவும் சிறந்து விளங்குகிறார்கள்.

இவர்கள் மத்தியில் கொடை வள்ளல்களுக்கும்
குறைவில்லை என்பதையும்
இங்கே குறிப்பிடுவது அவசியமாகும்.
இயலாதவர்களுக்கு உதவுவதில் அரசாங்கத்தையும்
தட்டிக்கேட்கவும் இவர்கள் தயங்குவதில்லை.
இங்கு தமிழும் சைவமும்
தளைத்தோங்குவதை இவர்கள் பெருமையுடன்
இன்றும் கூறுகிறார்கள்.
கோயில் திருவிழாக்களில் காவடியும் தீமிதிப்பும் தமிழ்
நாட்டிலும் ஈழத்திலும் நடைபெறுவதுபொலவே இங்கும்
நடைபெறுகின்றன. முதலில் 1850 இல் Terre Rouge என்னுமிடத்தில் தமிழ் செல்வந்தர்களால் ஸ்ரீ
கிருஷ்ணமூர்த்தி துரோபதை அம்மன் கோயில்
நிர்மாணிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து லூயிஸ்
துறையில் ஸ்ரீ சொக்கலிங்க மீனாட்சி அம்மன்
கோயிலும் கிளெமென்சியாவில்
அருள்மிகு பாலதந்தை கோயிலும் Plaines des Roches
என்னும் நகரில் சிவ சுப்பிரமணியன் கோயிலும்
நிர்மாணிக்கப்பட்டன.
இக்கோயில் நிர்மாணிப்புப் பணிகளில்
காலத்துக்குக் காலம் வந்த தமிழக அரசாங்கங்கள்
எண்ணற்ற உதவிகளைக் கொடுத்துதவின என்பதையும்
இங்கு நான் நன்றியுடன் குறிப்பிட
விரும்புகிறேன்.
சமயமே தமிழர்களை இணைப்பதும்
ஒற்றுமைப்படுத்துவதுமான சக்தியென இவர்கள்
உறுதியாக நம்புகிறார்கள்.
எமது கண்ணுக்கு எட்டாத தூரத்திலிருக்கும் இந்த
உடன்பிறப்புகளின் வாழ்வில் சுகமும் செல்வமும்
சகோதரத்துவமும் வளர வாழ்த்துவோம்!

இந்தக் கோயில் எங்கேயிருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களோ தெரியாது.
ஆப்பிரிக்க கிழக்குக் கரையோரச் சமுத்திரத் தீவான மொரிசியசு என்னும் நாட்டில்.
மொரிசியசில் பிரெஞ்சுக்காரர்கள் குடியேறிய 1721ஆம் ஆண்டளவில் தமிழர்கள் பயிற்சி பெற்ற
தொழிலாளர்களாகவும் வெள்ளைகாரர்களின்
பிள்ளைகளுக்கு ஆசிரியர்களாகவும்
வந்துசேர்ந்தார்கள். ஏனைய இந்தியக்
குடியேற்றவாசிகள் போன்றே தமிழர்களும் புத்திசீவிகளாகவும் வணிகர்களாகவும் சிறந்து விளங்குகிறார்கள்.
இவர்கள் மத்தியில் கொடை வள்ளல்களுக்கும்
குறைவில்லை என்பதையும்
இங்கே குறிப்பிடுவது அவசியமாகும்.
இயலாதவர்களுக்கு உதவுவதில் அரசாங்கத்தையும்
தட்டிக்கேட்கவும் இவர்கள் தயங்குவதில்லை.
இங்கு தமிழும் சைவமும்
தளைத்தோங்குவதை இவர்கள் பெருமையுடன்
இன்றும் கூறுகிறார்கள்.
கோயில் திருவிழாக்களில் காவடியும் தீமிதிப்பும் தமிழ்
நாட்டிலும் ஈழத்திலும் நடைபெறுவதுபொலவே இங்கும்
நடைபெறுகின்றன. முதலில் 1850 இல் Terre Rouge என்னுமிடத்தில் தமிழ் செல்வந்தர்களால் ஸ்ரீ
கிருஷ்ணமூர்த்தி துரோபதை அம்மன் கோயில்
நிர்மாணிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து லூயிஸ்
துறையில் ஸ்ரீ சொக்கலிங்க மீனாட்சி அம்மன்
கோயிலும் கிளெமென்சியாவில்
அருள்மிகு பாலதந்தை கோயிலும் Plaines des Roches
என்னும் நகரில் சிவ சுப்பிரமணியன் கோயிலும்
நிர்மாணிக்கப்பட்டன.
இக்கோயில் நிர்மாணிப்புப் பணிகளில்
காலத்துக்குக் காலம் வந்த தமிழக அரசாங்கங்கள்
எண்ணற்ற உதவிகளைக் கொடுத்துதவின என்பதையும்
இங்கு நான் நன்றியுடன் குறிப்பிட
விரும்புகிறேன்.
சமயமே தமிழர்களை இணைப்பதும்
ஒற்றுமைப்படுத்துவதுமான சக்தியென இவர்கள்
உறுதியாக நம்புகிறார்கள்.
எமது கண்ணுக்கு எட்டாத தூரத்திலிருக்கும் இந்த
உடன்பிறப்புகளின் வாழ்வில் சுகமும் செல்வமும்
சகோதரத்துவமும் வளர வாழ்த்துவோம்!

சித்தி சித்ரவதை.............!



திருவண்ணாமலையை சேர்ந்த விமல்ராஜ் (வயது 28). இவரது மனைவி லோகேஸ்வரி (26). இவர்கள் இருவரும் சென்னையில் கூலித்தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு அஸ்வினி (4லு) என்ற மகளும், அஸ்வின் (3லு) என்ற மகனும் உள்ளனர். இந்த குழந்தைகளை, சென்னையில் வைத்து பராமரிக்க முடியாது என்பதால், லோகேஸ்வரி தன் தங்கை முத்துலட்சுமியிடம் ஒப்படைத்து இருந்தார்.
முத்துலட்சுமி, குடியாத்தம் அடுத்துள்ள கொத்தமாரிகுப்பம் கிராமத்தில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், குழந்தைகளை முத்துலட்சுமி கொடுமை செய்வதாகவும், குழந்தைகள் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கிராமத்தில் வசிப்பவர்கள், விமல்ராஜூக்கு தகவல் தெரிவித்தனர்.
உடல் முழுவதும் காயம்
இதையடுத்து, விமல்ராஜ் தன் மனைவி லோகேஸ்வரியுடன், நேற்று முன்தினம் குடியாத்தம் வந்தார். அங்கு, தன் குழந்தைகள் அடையாளம் தெரியாதபடி, உடல் முழுவதும் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து முத்துலட்சுமியிடம் விசாரித்தபோது, அவர் சரியான பதிலை தெரிவிக்கவில்லை.
பின்னர், குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளை தூக்கிச்சென்றார். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், குழந்தைகள் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படியும் பரிந்துரை செய்துள்ளனர். இதனடிப்படையில், குழந்தைகள் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீதிபதி அதிர்ச்சி
இந்த குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கிய டாக்டர்கள், ‘சிறுமி அஸ்வினிக்கு தலையில் பலத்த காயம் உள்ளதால், 2 கண்களும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த குழந்தையின் உடலில் பல இடங்களில் சிறு சிறு காயங்களும் உள்ளன. சிறுவன் அஸ்வின் முகத்தில் பலத்த காயமும், காலில் வெந்நீர் ஊற்றியதால் ஏற்பட்ட காயங்களும், உடல் முழுவதும் சிறுகாயங்களும் உள்ளன. இந்த குழந்தைகளை கட்டை அல்லது குச்சியால் தாக்கி இருக்கவேண்டும்’ என்று கூறினார்கள்.
இந்த செய்தி ‘தினத்தந்தி’ பத்திரிகையில் நேற்று வெளியானது. இந்த செய்தியை, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர், நீதிபதி டி.மீனாகுமாரி படித்து பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடல்நல அறிக்கை
பின்னர், பத்திரிகையில் வந்த செய்தியையே வழக்கு மனுவாக கருதி, தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார்.
இந்த வழக்கை உடனடியாக நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி மீனாகுமாரி, நடந்துள்ள இந்த சம்பவம் மனித உரிமை மீறல் செயலாகும். எனவே, இந்த சம்பவம் குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். அதேபோல, குழந்தைகள் உடல்நலம் குறித்து வேலூர் அரசு மருத்துவமனை தலைவர் (டீன்) விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

குர்ஆனை அவமதித்த கிறிஸ்தவ தம்பதியினர் உயிருடன் எரித்துக் கொலை





பாகிஸ்தானில் குர்ஆனை எரித்ததாக குற்றம்சாட்டப்பட்ட தம்பதியினரை உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் கசூர்(Kasur) மாவட்டத்தில் உள்ள சக்(Sak) என்ற கிராமத்தில், சஹ்ஜாத் மசி-ஷமா(Shahzad Masih- Shama Bibi) என்ற கிறிஸ்துவ தம்பதியினர் கூலித் தொழிலாளிகளாக பணியாற்றி வந்துள்ளனர்.
இவரது உரிமையாளர் முஹம்மத் யூசுப் குஜ்ஜார்(Muhammad Yousuf Gujjar) என்பவர் இந்த தம்பதியருக்கு ஒழுங்காக கூலியை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

இதனால் சஹ்ஜாத்திற்கு அவரது உரிமையாளர் முஹம்மத்துடன் வாக்குவாதம் நேர்ந்ததுடன், அத்தம்பதியினர் இஸ்லாமிய புனித நூலான குர்ஆனை தீயீட்டு கொளுத்தியதாக கூறப்படுகிறது.

இதை அறிந்து கொந்தளித்த ஏராளமானவர்கள் உள்ளூர் மதத் தலைவரின் தலைமையில் முஹம்மத் யூசுப் குஜ்ஜாரின் செங்கல் சூளைக்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து சஹ்ஜாத் மசியின் வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த கும்பல் ஒன்று, அந்த தம்பதியினரை குடிசையை விட்டு வெளியே இழுத்து, அடித்தும் உதைத்தும் சித்ரவதை செய்துள்ளது.
அப்போது தங்கள் எந்த தவறையும் செய்யவில்லை என்றும் தங்களது உரிமையாளர் பழிவாங்கும் நோக்கில் இப்படி ஒரு கட்டுக்கதையை கட்டியுள்ளார் எனவும் கூறி கதறியுள்ளனர்.

ஆனால் அதை ஏற்க மறுத்த அந்த கும்பல், கொழுந்து விட்டு எரிந்த செங்கல் சூளை தீக்குள் உயிருடன் அத்தம்பதியினரை வீசியுள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் முழுவதும் பொலிஸ் அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்றதாக சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இச்சம்பவம் தொடர்பாக சுமார் 50 பேரை கைது செய்துள்ளதாகவும், தலைமறைவாக இருக்கும் முஹம்மத் யூசுப் குஜ்ஜாரை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.