பனிக்குடத்துடன் பிறந்த குழந்தை: மருத்துவ உலகில் அதிசயம் (வீடியோ இணைப்பு)



அமெரிக்காவில் ஆண் குழந்தை ஒன்று பனிக்குடத்துடன் பிறந்துள்ளது மருத்துவ உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் செல்சீ. 7 மாத கர்ப்பிணியாக இருந்த அவர்செடார்ஸ்-சினாய் மெடிக்கல் சென்டரில் அனுமதிக்கப்பட்டார்.

அறுவை சிகிச்சை மூலம் குறை மாதத்தில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் குழந்தை பனிக்குடம் உடையாமலேயே பிறந்துள்ளது.
80,000 குழந்தைகளில் ஒன்றுதான் பனிக்குடத்துடன் பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பனிக்குடத்துக்குள் கை, கால்களை மடக்கி குழந்தை இருந்ததை பார்க்கவே வியப்பாக இருந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.