சிங்கப்பூருக்கு பணி நிமித்தமாக வரும் வெளிநாட்டவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அடங்கிய 14 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ படத்தை சிங்கப்பூர் அரசு தயாரித்துள்ளது.
சிங்கப்பூரில் பின்பற்றப்படும் தொழிலாளருக்கான பணி நடைமுறைகள் மற்றும் உரிமைகள் பற்றி இந்த படம் விளக்கும். சிங்கப்பூர் தொழிலாளர் அமைச்சகமும், புலம் பெயர்ந்த தொழிலாளர் நல மையமும் இணைந்து இந்த படத்தை உருவாக்கி உள்ளனர்.
இந்தியா, வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும் தொழிலாளர்கள், அவரவர் நாடுகளிலேயே அவரவர் தாய்மொழிகளில் இந்த வீடியோ படத்தை பார்க்க வசதி செய்து தரப்படும் என்று சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டவர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க இந்த வீடியோ படம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.