இந்திய பங்குசந்தைகள் நேற்று சரிவை சந்தித்த நிலையில் இன்று(அக்., 28ம் தேதி) ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 81.43 புள்ளிகள் உயர்ந்து 26,834.33-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 20.60 புள்ளிகள் உயர்ந்து மீண்டும் 8 ஆயிரம் புள்ளிகளை தொட்டு 8,012.30 புள்ளிகளில் வர்த்தகமாகின. முக்கிய நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்க தொடங்கியிருப்பதாலும், உலகளவில் பங்குசந்தைகளில் சாதகமான சூழல் நிலவுவதாலும் பங்குசந்தைகளில் உயர்வு காணப்படுகின்றன.