இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால்,
கறுப்பு பணம் பதுக்கியுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள 3 பேர் பெயரை, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியிட்டோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். கறுப்பு பணம் பதுக்கிய அனைவரது பெயரையும் வெளியிட பா.ஜ.,மற்றும் காங்கிரஸ் கட்சிகள் விரும்பவில்லை. சக்தி வாய்ந்த நபர்களை பாதுகாக்க மத்திய அரசு தற்போதும் முயல்கிறது.
முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, கோகிலாபென் அம்பானி, சந்தீப் டாண்டன், நரேஷ் கோயல் உள்ளிட்ட 15 பேர் வெளிநாட்டில் சட்டவிரோதமாக கறுப்பு பணம் பதுக்கியுள்ளனர். கறுப்பு பணம் பதுக்கிய அனைவரது பெயரையும் மத்திய அரசு வெளியிட வேண்டும். அப்போது தான் நாங்கள் கூறிய குற்றச்சாட்டு உண்மையா அல்லது பொய்யா என்பது பற்றி மக்களுக்கு தெரியும் என கூறினார்.