சிங்கப்பூர் மக்களை பாடாய் படுத்தி வரும் பேய் பொம்மை


சிங்கப்பூர், ஜுன் 13-

சாலையோர மரத்தின் கீழ் கைவிடப்பட்ட நிலையில் கிடக்கும் பழங்கால பொம்மையொன்று, அந்நாட்டின் பழமைவாதிகளுக்கும், பகுத்தறிவாளர்களுக்கும் இடையே புதிய பட்டிமன்றத்தை துவக்கி வைத்துள்ளது. சிங்கப்பூர் மக்களை பாடாய் படுத்தி வரும் பேய் பொம்மை

அந்த பொம்மை தனியாக இருக்கும் போது கரகரப்பான ஆணின் குரலில் ‘மலாய்’ மொழியில் பேசுவதையும், முன்னர் இருந்த நிலையில் இருந்து கழுத்தை திருப்பி வேறு பக்கமாக பார்ப்பதையும் அறிந்த அந்த பொம்மையை வைத்திருந்த ஒரு பெண், அதன் கண்ணில் துணியை கட்டி சாலையோர மரத்தின் கீழ் கிடத்தி விட்டு சென்றதாகவும், அந்த பகுதிக்கு அது வந்த பிறகு சுற்றுப்புறங்களில் தற்கொலையும், மரணமும் அதிகரித்து வருவதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன.

சமூக வலைத்தளங்களிலும் இந்த ‘ஆவி பொம்மை’யைப் பற்றிய செய்திகள் வேகமாக பரவி வருகிறது. இதை எப்படி அழிக்கலாம்? என்பது தொடர்பாக பல்வேறு தரப்பினர் பலவாறான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.