பெய்ஜிங், ஜூன் 14–
விண்வெளியில் பயணம் செய்வதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். அதை பயன்படுத்தி சில தனியார் நிறுவனங்கள் விண்வெளி பயணத்தக்கு ஏற்பாடு செய்து வருகின்றன. அதன்படி நெதர்லாந்தை சேர்ந்த ஒரு நிறுவனம் ஆன்–லைனில் விண்வெளி பயணத்துக்கான அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி, விண்வெளியில் பயணம் செய்ய விரும்புபவர்கள் 125 கிலோ எடைக்கு குறைவாக இருக்க வேண்டும். மேலும் விண்வெளியில் 5 முதல் 6 நிமிடம் மட்டுமே பயணம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு ரூ. 60 லட்சம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை பொருப்படுத்தாத சீன பணக்காரர்கள் 305 பேர் விண்வெளி பயணத்துக்கு டிக்கெட் முன் பதிவு செய்தனர்.
‘தயாபோவ்’ என்ற ஆன்–லைனில் இந்த டிக்கெட் விற்பனை நேற்று முன்தினம் மட்டுமே நடந்தது. விண்வெளி பயண அனுபவத்தை அறியும் ஆவலில் பெரும் பாலானவர்கள் ஆர்வமாக உள்ளனர். அதனால் தான் அமோகமாக டிக்கெட் விற்பனை நடைபெற்றுள்ளது.
விண்வெளியில் ஒரு தடவை 2 பேர் மட்டுமே விண்கலத்தில் பயணம் மேற்கொள்ள முடியும். அதற்கு முன்னதாக அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.