போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்முவில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இன்று பாகிஸ்தான் படைகள் மோர்ட்டார் குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் திடீர் தாக்குதல் நடத்தின.
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெந்தர்-கிம்பர்கலி-கெரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்திய சாவடிகளின் மீது இன்று காலை சுமார் 7.30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்திய படைகளும் எதிர்தாக்குதல் நடத்தி பதிலடி தந்தது.
இச்சம்பவத்தில் உயிர் பலியோ, காயங்களோ ஏதுமில்லை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.