அமெரிக்கா,
தற்போது 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தங்கள் பெற்றோர்களின் துணையுடன் முகநூலை பயன்படுத்தலாம் என புதிய அறிவிப்பை அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து முகநூல் நிறுவனம் அமெரிக்க பெடரல் வர்த்தக ஆணையத்திடம் இதற்கான காப்புரிமையை பெற்றுள்ளதோடு 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் முகநூலைப் பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது.
இந்த புதிய திட்டத்தின் அடிப்படையில் முகநூலை சிறுவர்கள் பயன்படுத்தவதற்கு ஏதுவான சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் முகநூலை பயன்படுத்த முயற்சித்தால் அவர்களின் பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் அவர்களின் முகநூலின் கணக்குகளை முறையாக தெரிவித்த பின்னரே சிறுவர்கள் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
இதனிடையே, இந்த சிறுவர்களின் வயது மற்றும் பெற்றோர்களின் விவரங்கள் முகநூல் நிர்வாகத்தினரால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் சிறுவர்கள் இந்த சமூக தளத்தை தாராளமாக பயன்படுத்தலாம். இத்துடன், சிறுவர்களின் முகநூல் கணக்கு தத்தம் பெற்றோர்களின் கணக்குகளோடு இணைக்கப்பட்டு தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை அவ்வப்போது கண்காணிக்கும் வசதியையும் முகநூல் நிறுவனம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.