விமானத்தில் சிறுமியை சிறுநீர் கழிக்க விடாமல் அமெரிக்க ஊழியர்கள் கொடுமை

நியூயார்க், ஜூன் 17–
அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கை சேர்ந்தவர் ஜெனீபர் தேவரியஸ். இவர் நியூயார்க்கில் இருந்து பாஸ்டன் நகருக்கு ‘ஜெட்புளு’ நிறுவன விமானத்தில் பயணம் செய்தார். உடன் தனது 3 வயது மகளும் சென்றார்.
இந்த விமானம் ‘டார் மாக் நகரில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அப்போது அவரது மகள், 3 வயது சிறுமி சிறுநீர் கழிக்க விரும்பினாள். அதற்காக அவளை விமானத்தில் உள்ள பாத்ரூம் அழைத்து செல்ல ஜெனீபர் முற்பட்டார்.
அதற்கு விமான பணிப் பெண்கள் (சிப்பந்திகள்) மறுத்துவிட்டனர். இதனால் அடக்க முடியாமல் தனது இருக்கையிலேயே சிறுமி சிறுநீர் கழித்துவிட்டார். அதைப் பார்த்த விமான பணிப் பெண் ஜெனீபரிடம் கடுமையாக கோபப்பட்டார்.
அதை தொடர்ந்து ஜெனீபர் தனது மகள் சிறுநீர் கழித்த இருக்கையை சுத்தம் செய்தார். இருந்தும் அப்பெண் விமானியிடம் அது குறித்து புகார் செய்தார். அவரும் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் சிறுமி சிறுநீர் கழித்ததை விமர்சனம் செய்தார்.
இதனால் ஜெனீபர் மனம் உடைந்தார். மற்ற பயணிகள் முன்பு தான் அவமானப்படுத்தப்பட்டதாக கருதினார். விமானத்தில் தனக்கும் மகளுக்கும் நேர்ந்த கொடுமை குறித்து டி.வி.யில் பேட்டி அளித்தார். அதைப்பார்த்த விமான நிறுவனம் தனது ஊழியர்களின் செயலுக்காக மன்னிப்பு கேட்டது