கெப்ளர்-10C கோளானது பூமியைப் போன்று இரண்டு மடங்கு அளவு பெரியதாகவும் பூமியைவிட 17 மடங்கு எடை கொண்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கோள் 45 நாட்களுக்கு ஒரு முறை சூரியனைப் போன்ற வேறொரு நட்சத்திரத்தைச் சுற்றி வருவதாகவும் இது பூமியில் இருந்து 560 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்திருப்பதாகவும் அறிவியல் ஆய்வுகள் காட்டியுள்ளன.
கெப்ளர்-10C என்ற கோளின் சுற்றளவு 18 ஆயிரம் மைல்கள் என இந்த ஆய்வை வழிநடத்திக்கொண்டிருக்கும் விஞ்ஞானி சேவியர் டுமஸ்கியு தெரிவித்தார். இதுகுறித்த விரிவான ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்