மோதிர மவுஸ் – நவீன உலகின் புதிய கண்டுப்பிடிப்பு


       இன்றைய உலகின் அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சியால் பல புதிய கண்டுப்பிடிப்புகள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. அந்த பட்டியலில் புதிதாய் கண்டுப்பிடிக்கப்பட்ட மோதிர மவுஸும் இடம் பிடித்துள்ளது.
தற்போது நானோ தொழில்நுட்ப பயன்பாடுகள் அதிகரித்து இருப்பதால் கணினியை இயக்குவதில் மவுஸ் பெரும் பங்காற்றுகிறது. அவ்வகையில் தற்போது மின்கம்பி மற்றும் புளுடூத் (Bluetooth) போன்ற இணைப்புகள் இல்லாமல் மவுஸ் பயன்படுத்தப்படுகின்றன.
கைகளுக்கு அடக்கமாக தயார் செய்யப்பட்ட மவுஸ் இப்பொழுது அதையும் தாண்டி மோதிர மவுஸாக நம்மிடையே வலம் வந்திருக்கிறது.  இந்த உள்ளங்கை மவுஸுக்கு “நோட் மவுஸ்” (Note mouse) என்று பெயரிடப்படுள்ளது.
இதனை கணினியில் உள்ள புளுடூத்துடன் இணைத்து பின்னர் விரலில் மாட்டிக் கொண்டு இயக்கலாம். இதனால் கணினியின் மிக அருகில் அமர்ந்து இயக்குவதின் மூலம் ஏற்படும் கண் எரிச்சல் பிரச்சனைக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.

மோதிர மவுஸ் – நவீன உலகின் புதிய கண்டுப்பிடிப்பு
மோதிர மவுஸ்