இந்தியாவில் கால் பதிக்கும் தென் ஆப்ரிக்கா ஏர்லைன்ஸ்!!

மும்பை: இந்தியாவிற்கும், தென்னாப்ரிக்கவிற்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்து அதிகரித்து வருவதன் பொருட்டாக, இந்தியாவில் தன்னுடைய சேவைகளை விஸ்தரிக்க முயற்சி செய்து வருகிறது தென் ஆப்ரிக்கா ஏர்லைன்ஸ் நிறுவனம். இந்த ஏர்லைன்ஸ் நிறுவனம், ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து மும்பைக்கு தினசரி விமான சேவையை நடத்தி வருகிறது. பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்தால், டெல்லியிருந்தும் நேரடி விமான சேவையை வழங்கலாம் என்று யேரிசத்து வருகிறது இந்த நிறுவனம்.