லண்டன்: பொதுவாக இந்தியா ஒரு ஏழை நாடாக உலக நாடுகள் மத்தியில் சித்தரிக்கப்பட்டாலும், இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். 1.56 இலட்சம் மில்லியனர்களையும், மேலும் 3000 பேரை இந்த பிரசித்தி பெற்ற பணக்காரர்கள் குழுவில் சேர்க்கும் வல்லமையும் கொண்ட நாடாக இந்தியா 2013-ம் ஆண்டில் உருவாகியுள்ளது. மிகவும்-பணக்காரர்களாக இருக்கும் மக்களைக் கொண்டிருக்கும் பட்டியலில், இந்தியா உலகளவில் 16-வது இடத்தைப் பெற்றுள்ளது. கேப்ஜெமினி மற்றும் RBC வெல்த் மேனேஜ்மென்ட் ஆகியவர்களால் வெளியடப்பட்ட உலக செல்வவள அறிக்கை 2014 (World Wealth Index)-ல், இந்தியாவில் 2013-ம் ஆண்டில் 1,56,000 பேர் பெரும்பணக்காரர்களாக இருக்கிறார்கள், இந்த எண்ணிக்கை 2012-ம் ஆண்டு 1,53,000 ஆக இருந்தது குறிப்பிடதக்கது.
