மைக்கேல் ஷூமாக்கரால் இனி அடுத்தவர்கள் உதவி இன்றி வாழ முடியாதாம்

பெர்ன்: கோமாவில் இருந்து கடந்த வாரம் மீண்ட பார்முலா நம்பர் ஒன் கார்பந்தய வீரரான மைக்கேல் ஷூமாக்கரால் இனி தனது வாழ்நாள் முழுவதும் எதையும் தானாக செய்ய முடியாது என்று மருத்துவ நிபுணர் எரிக் ரீடெரர் தெரிவித்துள்ளார். பார்முலா ஒன் கார் பந்தய வீரரான மைக்கேல் ஷூமாக்கர் கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி பிரான்ஸில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் பிரான்ஸில் உள்ள கிரனோபல் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அவர் கோமாவில் இருந்தார். 6 மாதங்கள் கழித்து அவர் கடந்த 16ம் தேதி கோமாவில் இருந்து மீண்டார்.