சூரிய குடும்பத்தைத் தவிர்த்து இன்னும் 715 புதிய உலகங்களா? நாசாவின் அதிசய தகவல்!!!

நாசாவின் கெப்ளர் தொலைநோக்கியின் மூலம் திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது. அண்மையில் இந்த தொலைநோக்கி புதிய கோள்களைக் கண்டுப்பிடித்திருக்கிறது. சூரிய குடும்பத்திற்கு வெளியே 715 புதிய உலகங்கள் இருப்பதாக நாசாவின் தகவல்கள் கூறுகின்றன. 


இந்த புதிய உலகங்கள் செழிப்பாகவும் மனிதர்கள் அங்கே வாழக்கூடிய தன்மை மிக்கதாகவும் தற்போது கிடைத்த செய்திகள் விவரிக்கின்றன. இந்த புதிய உலகங்கள் கிரகங்களின் எண்ணிக்கையை அதிகமாக்கியிருப்பதாக கலிபோர்னியாவைச் செர்ந்த நாசாவின் ஏம்ஸ் ஆராய்ச்சி மையத்தின் ஜேக் ஜே லிசாவுர் கூறியிருக்கின்றார்.   
கெப்ளர் தொலைநோக்கியின் மூலமே இது போன்ற புதியவகை ஆராய்ச்சிகள் சுலபமாகின்றன என்று நாசாவின் விண்வெளி ஆய்வாளர் ஒருவர் கூறியிருக்கிறார். பூமியை போன்று மனிதர்கள் வாழக்கூடிய செழிப்பான கிரகங்களைக் கண்டுப்பிடிக்க கெப்ளர் பெரிதும் உதவுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.