மண்ட்லா மாசேகோ…. ஒரு புறநகர் வானொலி அறிவிப்பாளர். இவரது குடும்பத்தில் இதுவரை யாருமே தென்னாப்பிரிக்காவை விட்டு ஒரு அடி கூட வெளியே எடுத்து வைத்ததில்லை. ஆனால், இவர் மட்டும் அடுத்தாண்டு விண்வெளிக்குப் பறக்கவிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், விண்வெளிக்குச் செல்ல விருக்கும் முதல் ஆப்பிரிக்க கறுப்பினத்தவர் மாண்ட்லா மசேகோ.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஒன்று நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற இவர் விண்வெளியில் 103 கிலோமீட்டர் பறக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
மொத்தம் 75 நாடுகளிலிருந்து லட்சக் கணக்கானோர் போட்டிக்கு
விண்ணப்பித்திருந்தனர். இறுதியில் தேர்வான 23 அதிர்ஷ்டசாலிகளில் ஒருவர் தான் மாண்ட்லா மாசெகோ.
விண்ணப்பித்திருந்தனர். இறுதியில் தேர்வான 23 அதிர்ஷ்டசாலிகளில் ஒருவர் தான் மாண்ட்லா மாசெகோ.
முன்னாள் பொறியியல் துறை மாணவரான மண்ட்லா கல்வி கட்டணத்தைச் செலுத்த முடியாததால் படிப்பை பாதியிலேயே கைவிட்டவர். ஆனால் அவருக்கு தான், 100,000 அமெரிக்க டாலர் (RM 335,110) பெறுமானமுள்ள விண்வெளி பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.
புறநகர்ப் பகுதியில், 4 உடன்பிறப்புகளுடன் இன்னமும் பெற்றோருடன் வசித்து வரும் 25 வயது மண்ட்லா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி, முன்னாள் தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா காலமான சில மணிநேரங்களில் அப்போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.