காலத்தால் மறக்கப்பட்ட விஞ்ஞானி



      நம்மில் யாருக்காவது நிக்கோலா தெஸ்லாவை பற்றி தெரியுமா?         காலத்தால் மறக்கப்பட்ட இந்த அறிவியலாளர் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் மின்னியல், காந்தவியல் ஆகிய துறைகளில் பெறும் புரட்சியை ஏற்படுத்தியவர்.


தெஸ்லாவின் மின் வழங்கள் முறைமைகள், மாறுதிசை மின்னோட்ட மோட்டார்கள் மற்றும் 1894 இல் இவரது கம்பியில்லாத் தொடர்பு செயல் முறை விளக்கங்கள் ஆகியவை இரண்டாம் தொழிற்புரட்சி ஏற்பட காரணமாகின.

இவருடைய பல கண்டுப்பிடிப்புகள் தற்கால மின் பொறியியலுக்கு உறுதுணையாக அமைந்தது. தற்போதைய அறிஞர்கள் இவரை “இயற்பியலின் தந்தை” என்றும்   “ இருபதாம் நூற்றாண்டைக் கண்டுப்பிடித்தவர்” என்றும் “தற்கால மின்னியலின் காப்பாளர்” என்றும் சிறப்பித்து வருகின்றனர்.

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியைக் குறித்து இவருடைய சில நம்பத்தகாத கூற்றுகள் மக்களிடையே இவர் பைத்திய அறிவியலாளர் எனும் எண்ணத்தை ஏற்படுத்தியது. நாளடைவில் அவருடைய புகழை மறக்கவும் செய்தது.