மூடப்பட்டது நோக்கியா ஆலை : செல்போன் தயாரிப்பு பணி நிறுத்தம் :

சென்னையில் நோக்கியா ஆலை மூடல்: காலையில் பணிக்கு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்







காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இயங்கி வந்த நோக்கியா நிறுவனம் மூடப்பட்டது. தொழிற்சாலையில் செல்போன் தயாரிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன.
நோக்கியா நிறுவனத்தில் பணியாற்றி ஆலை மூடப்பட்டதால் பணியிழந்த 900 பேருக்கு இழப்பீடு வழங்குவதற்கு உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உடன்படிக்கையின்படி நோக்கியாவில் வேலையிழந்த ஊழியர்கள் ரூ.5.5 லட்சம் முதல் 9 லட்சம் வரை இழப்பீடு பெற வாய்ப்பு உள்ளது என்றும், நவம்பர் 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை இழப்பீடு தொகை வழங்கப்படும் என்றும் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம் கடந்த 2006ஆம் ஆண்டு ஆலையைத் துவக்கியது. நிதி நிலையைக் காரணம் காட்டி நோக்கியா நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு கைமாற்றப்பட்ட நிலையில், ஸ்ரீபெரும்புதூர் ஆலையை மூட நிர்வாகம் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.