காங். தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இளங்கோவனுக்கு த.மா.கா.வின் வாழ்த்துகள்: ஞானசேகரன் (Cong may Split in TN)

காங். தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இளங்கோவனுக்கு த.மா.கா.வின் வாழ்த்துகள்: ஞானசேகரன்தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள ஞானதேசிகனுக்கும், கட்சியின் தமிழக விவகாரங்களை கவனிக்கும் முகுல் வாஸ்னிக்கிற்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து ஞானதேசிகன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று நியமனம் செய்யப்பட்டார். புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளங்கோவனுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான வேலூர் ஞானசேகரன், தமிழ் மாநில காங்கிரஸ் வாழ்த்து தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

வாசன் இதுவரை த.மா.கா.வை தொடங்காத நிலையில் ஞானசேகரன் கருத்து தெரிவித்து இருப்பது. தமிழகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் உதயமாவது உறுதி என்பதை தெரிவிப்பதாக அமைந்துள்ளது.