எங்க அப்பா எங்கே? மலேசிய விமான நிறுவனம் மீது வழக்கு போட்ட சிறுவர்கள்

மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவரது மகன்கள் மலேசிய விமான நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பிஜீங் சென்ற MH370 விமானம் திடீரென நடுவானில் மாயமானது.
இதனையடுத்து இந்திய பெருங்கடலில் விழுந்ததாக மலேசிய அரசு கூறியதன் பேரில் சர்வதேச நாடுகளான அமெரிக்க, பிரிட்டன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பூளூபென் நீர்மூழ்கி கப்பலின் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.













ஆனால் அங்கு விழுந்தது விமானத்தின் பாகங்கள் இல்லை என பின்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த மலேசியாவைச் சேர்ந்த ஜீ ஜிங் ஹாங்கின் (Jee Jing Hawking) என்ற நபரின் மகன்கள் ஜீ கின்சன்(Jee Kinson Age-13), ஜீ கின்லேண்ட்(Jee Kinland Age-11) ஆகிய இருவரும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
அதில் அவர்கள் கூறியதாவது, மலேசியன் விமான நிறுவனம் கவனக் குறைவாக இருந்ததுடன் பாதுகாப்பான பயணத்தை அளிக்க தவறிவிட்டதால் எங்களின் தந்தை மாயமாகிவிட்டார்.
எனவே எங்களுக்கு ஏற்பட்ட மனவருத்தம், கவலை, ஆதரவில்லாமல் தவிப்பதற்கு அந்நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இதுகுறித்து அவர்களின் வழக்கறிஞர் அருணன் செல்வராஜ் கூறுகையில், இவ்விடயம் பற்றி பல நிபுணர்களுடன் பேசிய பிறகு, ஆதாரங்கள் இருப்பதால் தான் வழக்கு தொடர்ந்தோம் என்றும் தற்போதைய காலத்தில் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றுள்ளதால், பெரிய விமானம் மாயமானதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.