அமெரிக்க மிருகக்காட்சி சாலையில் உலகின் மிகப்பெரிய மலைப்பாம்பு ஆண் துணையின்றி முட்டையிட்டு குட்டி ஈன்றது.
அமெரிக்காவில், கென்டுக்கி பகுதியில் லூயிஸ்வில்லி என்னும் மிருகக்காட்சி சாலை உள்ளது. 20 அடி நீள்முள்ள, 11 வயதுடைய இந்தப் பாம்பிற்கு 'தெல்மா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுவே உலகில் நீளமான பாம்பாக கருதப்படுகிறது. இந்தப் பாம்பு கடந்த 2012 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் 61 முட்டைகள் இட்டது. பிறகு இந்த 'தெல்மா' பாம்பு ஆண் துணையின்றி இருந்து வந்தது.
தற்போது இது முட்டையிட்டு குட்டி ஈன்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆண் துணையின்றி பிறப்பது உலக வரலாற்றில் இதுவே முதன் முறையாகும்.