அதில், இஸ்ரேல் 4–வது இடம் பிடித்துள்ளது. அங்கு 35.1 முதல் 35.6 சதவீதம் குழந்தைகள் பசியால் வாடுகின்றனர். அதே நேரத்தில் கிரீஸ் (40.5 சதவீதம்), முதல் இடத்திலும், லாத்வியா (38.2 சதவீதம்) 2வது இடத்திலும், ஸ்பெயின் (36.3 சதவீதம்) 3–வது இடத்திலும் உள்ளன.
பணக்கார நாடுகளில் தற்போது வறுமையால் வாடும் குழந்தைகளின் எண்ணிக்கை 26 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேலில் வறுமை அதிகரிக்க வேலையில்லா திண்டாட்டமே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
அங்கு இளைஞர்களுக்கு நிலையான வேலைகள் கிடைக்காததால் அவர்களால் அதிக அளவு பணம் சம்பாதிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வறுமையில் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்த நாடுகள் பட்டியலில் நார்வே முதலிடம் வகிக்கிறது. இங்கு 5.3 சதவீதம் குழந்தைகளே பசியால் வாடுகின்றனர்.