அமெரிக்காவின் சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஜூபிடர் கிரகத்தில் வீசி வரும் புயலை ஹப்பிள் (Hubble) தொலைநோக்கியின் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் ஜூபிடரின் நிலவான கானிமேட்டை (Ganymede) புயல் கடந்து சென்றபோது, ராட்சத கண்ணை போல தோற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நாசா செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ஜூபிடரில் கடந்த 400, 500 ஆண்டுகளாக இப்புயல் வீசிக் கொண்டிருக்கிறது என்றும் ஜூபிடரின் நான்கு பெரிய நிலவுகளில் ஒன்றான கானிமேட் கடந்ததை, ஹப்பிள் தொலைநோக்கியின் 3வது கமெரா படம் பிடித்து அனுப்பி வைத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.