இணையத்தில் ஒருவரை ஒருவர் மோசமாகத் திட்டுவது போன்ற துஷ்பிரயோகங்கள் அதிகம்.
இப்போதுள்ள பரிந்துரைகள் சட்டமாக்கப்பட்டால், இப்படியான நபர்களை இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும்.
இந்தக் குற்றத்துக்காக இப்போது அதிகபட்சமாக 6 மாதங்களே தண்டனை அளிக்கப்படுகின்றது.
பிரபல இணைய துஷ்பிரயோக சம்பவங்கள் பலவற்றின் தொடர்ச்சியாக அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.