பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அழைப்பு

பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து வர வேண்டும் என அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக தனியார் டி.வி., ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், தான் பிரதமராக பதவியேற்றதில் இருந்து 3முறை இந்தியா வந்துள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டன் வர வேண்டும் என ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். பிரதமரின் பிரிட்டன் பயணம் இந்தியாவுடன் நல்லுறவு கொள்ள வாய்ப்பாக அமையும் என்றும் கேமரூன் தெரிவித்துள்ளார்.