சரிதா தேவிக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம்: தடையை நீக்க கோரிக்கை


சரிதா தேவிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தை இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்த இந்திய குத்துச்சண்டை சங்கத் தலைவர் சந்தீப் ஜஜோடியா, சரிதா தேவி தமது செயலுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளதை சுட்டிக்காட்டினார். எனவே சரிதாவின் முந்தைய நன்னடத்தைகளை கருத்தில் கொண்டு அவர் மீதான தடையை நீக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் சரிதா தேவி பதக்கத்தை அணியை மறுத்தது, உணர்ச்சி வேகத்தில் நடந்த சம்பவம் என்றும் சந்தீப் ஜஜோடியா கூறியுள்ளார்.