மோடியை விட ரஜினிக்கு செல்வாக்கு உள்ளதா?: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!




சென்னை: பிரதமர் மோடியை விட நடிகர் ரஜினிக்கு செல்வாக்கு உள்ளதா?

என்ற கேள்விக்கு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் பதிலளித்துள்ளார்.

கேள்வி: மோடியை விட ரஜினி செல்வாக்கு மிக்கவர் என்று நினைத்து அவரை பாஜக அழைக்கிறதா?

பதில்: மோடி பிரபலமானவர் என்பதையே நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு எங்கும் செல்வாக்கு இல்லை. மோடி அலை என்பதே ஒரு மாயை. மோடியை மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தால், இடைத்தேர்தலில் குஜராத்திலும், ராஜஸ்தானிலும் பாஜக தோற்று, காங்கிரஸ் எப்படி ஜெயித்தது.
கேள்வி: நடிகர் ரஜினிகாந்தை இழுக்க பாஜக தலைவர்கள் முயற்சிப்பது குறித்து?

பதில்: ரஜினிகாந்த் எல்லோருக்கும் பொதுவானவர். அரசியலுக்கு அப்பாற்றபட்டு, தமிழக மக்களும், தலைவர்களும் அவரை நேசிக்கின்றனர். எனவே மதசார்பு கட்சியான பாஜகவுக்கு ரஜினி வரமாட்டார் என நினைக்கிறேன். தமிழக மக்களும் மதசார்பின்மையை எப்போதும் கடைபிடிப்பவர்கள் மட்டுமின்றி ஒவ்வொரு தேர்தலிலும் அதை நிரூபித்து வருகின்றனர். இதை ரஜினி அறிந்திருப்பார் என நினைக்கிறேன்.
என்று அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.