பங்குச் சந்தை: இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு




மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்தகம் தொடங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் அதிகரித்து 60.97 ரூபாயாக இருந்தது.

அந்நிய செலாவணிச் சந்தையில் அமெரிக்க டாலர் விற்பனை அதிகரித்ததை அடுத்து இந்திய ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்தது. நேற்று வர்த்தக நேர முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து 61 ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.