தேவதானப்பட்டி: நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக, வத்தலக்குண்டு - கொடைக்கானல் மலைப்பாதையில் மேலும் 5 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் 10 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக அப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மேலும் 5 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இப்பாதையை சரி செய்ய இன்னும் ஒரு மாத காலம் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.