இணையம்: எந்தெந்த நாடுகளில் எவ்வளவு வேகம்


                 நம்மில் பலர் தகவல் தொழில்நுட்ப சாதனங்களையே பெரிதும் சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தெரியாத இடங்கள் மற்றும் சாலைகளைத் தேடுவதற்கும், பலதரப்பட்ட சமூக வலைதளங்களில் தங்களை இணைத்துக் கொள்ளவும், தேவையான தகவல்களைத் விரல்நுனியில் தேடவும் இன்றைய தொலைத்தொடர்பு சாதனங்கள் பயன்படுகின்றன.

இணையம்: எந்தெந்த நாடுகளில் எவ்வளவு வேகம் 

தங்கள் மடிக்கணினி, கைத்தொலைப்பேசி உட்பட பலதரப்பட்ட கெட்ஜெட்டுகள் வழி இணைய வசதியை ஏற்படுத்திக் கொள்ள குறிப்பிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டியுள்ளது.
ஆனால், இவ்வாறு பணம் கட்டி இணையச் சேவையைப் பெற்றாலும், ஆபத்து அவசர நேரங்களில் பயன்படுத்துவதற்குள் பலரையும் பெரும் அவஸ்தைக்குள்ளாக்கிவிடுகிறது இணையம். ஆமை வேகத்தில் லோட் ஆவதற்குள் நம்மில் பலர் கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிடுகிறோம்.
பலர் இதனாலேயே மன அழுத்தத்திற்குள்ளாகின்றனர். உண்மையிலேயே நம் நாட்டில் மட்டும் தான் இப்படியா? அல்லது மற்ற நாடுகளில் இணையத்தின்  வேகம் எப்படி என்பதே பலரையும் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி.
எந்தெந்த நாடுகளில் இணையம் எவ்வளவு வேகம் என்ற கணக்கெடுப்பில் ஹாங்காங் முதலிடம் வகிக்கிறது. மற்ற நாடுகளில் என்ன நிலை என்பதை கீழ்க்கண்ட பட்டியலில் காணலாம்: 
 
ஹாங்காங்: 78.3 Mbps

சிங்கப்பூர் : 66.6 Mbps

ஜப்பான்: 41.5 Mbps

தைவான்: 39.3 Mbps

சீனா: 19.5 Mbps

தாய்லாந்து: 18.9 Mbps

வியட்னாம்: 14.2 Mbps

கம்போடியா: 5.9 Mbps

புருணை: 5.51 Mbps

மலேசியா: 5.48 Mbps

மியன்மார்: 5.0 Mbps

லாவோஸ்:4.5 Mbps

இந்தோனேசியா: 4.3 Mbps

பிலிப்பைன்ஸ்: 3.5 Mbps