புதுடெல்லி, ஜூன்.15–
அனைத்து தேவைகளுக்கும் இதை தேசிய அடையாள அட்டையாக பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மானியங்களை வங்கி மூலம் பெறவும் ஆதார் அட்டை தேவை என்று முந்தைய அரசு அறிவித்தது.
பலகோடி ரூபாய் செலவில் ஆதார் அட்டைகள் தயாரித்து வழங்கும் பணி நடந்தது. என்றாலும் ஆதார் அடையாள அட்டை நாடு முழுவதும் முழுமையாக வழங்கப்படவில்லை. ஒருசில மாநிலங்களில் ஆதார் அட்டை மூலம் மத்திய அரசின் மானியங்களை வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. என்றாலும் அனைவருக்கும் இதன் பயன் கிடைக்கவில்லை.
நேரடி மானியத்துக்கு சில மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆதார் அட்டையை செயல் படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன.
இதுகுறித்து மோடி தலைமையில் பொறுப்பு ஏற்றுள்ள மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. இதையடுத்து முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்த ‘ஆதார்’ அட்டை முறையை ரத்து செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது. எனவே ஆதார் அட்டை மூலம் அரசு மானியம் வழங்கும் முறையும் ரத்து ஆகிறது.