திண்டுக்கல் சிறுமலையில் இருந்து வழி தவறி வந்த மர நாய் குட்டி

திண்டுக்கல், ஜூன் 15–

திண்டுக்கல் அருகே சிறுமலை உள்ளது. 19 கொண்டை ஊசி வளைவை கொண்ட இந்த மலையில் அரிய வகை விலங்குகள் சுதந்திரமாக உலா வருகின்றன. இவைகளுக்கு சிறுமலை வாழைப்பழம், பலாப்பழம் உணவாக உள்ளதால் அரிய விலங்குகள் இந்த இடத்தை விட்டு நகருவதில்லை.
எனினும் நேற்று காலை மர நாய் குட்டி ஒன்று தாயிடம் இருந்து பிரிந்து வழி தவறி வந்து உள்ளது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று இதனை கைப்பற்றி பராமரித்து வருகின்றனர்.திண்டுக்கல் சிறுமலையில் இருந்து வழி தவறி வந்த மர நாய் குட்டி
இதுகுறித்து வனத் துறையினர் கூறுகையில் வழி தவறி வந்த மர நாய் குட்டியை காப்பாற்றி பராமரித்து வருகிறோம். 6 மாதத்திற்கு பின்னர் வனப்பகுதியில் விட்டுவிடுவோம் என்றனர்.