பீர் குடிக்க பப் வாசலில் விமானத்தை நிறுத்திய நபர்: குழப்பத்தில் மக்கள்

அஸ்திரேலியாவில் நபர் ஒருவர் பீர் குடிப்பதற்காக பப் வாசலில் விமானத்தை நிறுத்திவிட்டு சென்றது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் நியூமேன் பகுதியில் உள்ள பர்பிள் பப்புக்கு நபர் ஒருவர் பீர் குடிக்க, குட்டி விமானத்தில் சென்றுள்ளார்.
அவர் தனது இறக்கையில்லா குட்டி விமானத்தை பப்புக்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே பீர் குடிக்க சென்றுள்ளார்.
இச்செய்தி அப்பகுதி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது மட்டுமின்றி எல்லோரிடமும் காட்டுத்தீயை போல பரவியதால், அங்கு பொலிசார் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும் விமானத்தில் வந்த நபர் குடிபோதையில் வந்தாரா? என்று பொலிசார் நடத்திய சோதனையில் அவர் தெளிவாக இருப்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், பலமான காற்று வீசினால் இந்த இறக்கை இல்லா விமானம் கவிழ்ந்து மக்களுக்கு ஆபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் நபரின் செயல் முட்டாள்த்தனமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.