தமிழ்நாட்டில் தான் பெண் எடுக்க வேண்டும் என வெளிநாட்டு வாழ் தமிழர்கள் பண்ற காமடிக்கு அளவே இல்லை.
----------------------------
-----------------------------
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு அண்ணாநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், ஒன்றிய உதவி ஆணையராக இருக்கிறார். அறந்தாங்கியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மனைவி பானுமதி. இவர்களது மகள் பானுப்ரியா பி.ஏ., பி.எட்., படித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் உள்ள எஸ்.ஆர்.பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் - கண்ணகி, பிரான்ஸ் நாட்டில் இருக்கிறார்கள். இவர்களது மகன் கௌதமன் எம்.காம்., பட்டதாரியான இவர் பிரான்ஸ் நாட்டில் படித்து அங்கேயே ஒரு நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலை செய்கிறார்.
கௌதமன் தமிழ்நாட்டில் தான் பெண் எடுக்க வேண்டும் என்று சொன்னதால் அவரது பெற்றோர் அறந்தாங்கியில் பானுப்ரியாவை நிச்சயம் செய்தனர். நாளை எஸ்.ஆர்.பட்டிணத்தில் பிரமாண்டமாக செட் போடப்பட்டு திருமணம் நடக்க உள்ளது.
இந்த நிலையில் இன்று பெண் அழைத்து போக மணமகன் கௌதமன் மற்றும் அவரது பெற்றோர் வாடகை ஹெலிக்காப்டரில் அறந்தாங்கி வந்து இறங்கினர். பிறகு சடங்குகள் முடிந்த பிறகு அதே ஹெலிக்காப்டரில் மணமகளை அழைத்துச் சென்றனர்.
தமிழக அரசியல்வாதிகளை மிஞ்சிய அளவில் ஆடம்பரமான திருமணம் நாளை நடக்கிறது. ஹெலிக்காப்டருக்கு மட்டும் ரூ. 15 லட்சம் வாடகையாக கொடுக்கப்பட்டுள்ளது. ஹெலிக்காப்ட்டர் இறங்க உடனடி இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆடம்பர பெண் அழைப்பை அப்பகுதி மக்கள் அதிசயமாக பார்த்துச் சென்றனர். பிரான்சில் வளர்ந்தாலும் தமிழ் கலாச்சாரத்தை விட முடியாது. அதனால் தமிழ்நாட்டில் பெண் எடுக்கிறேன் என்றார் மணமகன்.