பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவினர் சுற்றிவளைத்து சுட்டுக் கொன்றனர். அந்த அதிரடி தாக்குதல் நடத்திய வீரர்கள் யார்? என்பது குறித்து இதுவரை ரகசியம் காக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பின்லேடனை சுட்டுக் கொன்ற வீரரை மையமாக வைத்து பாக்ஸ் நியூஸ் சேனல் நவம்பர் 11, 12-ம் தேதிகளில் சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. அதில் அந்த வீரர் யார் என்பது தெரியும் என்று பாக்ஸ் நியூஸ் சேனல் தெரிவித்துள்ளது.