தனியார் டி.வி.க்கு பணம் கைமாறிய வழக்கு: கனிமொழி உள்பட 19 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய உத்தரவு



கலைஞர் டி.வி.க்கு 200 கோடி பணப்பரிமாற்றம் நடைபெற்றது தொடர்பாக அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி கனிமொழி, தயாளு அம்மாள் மற்றும் ஆ.ராசா உள்ளிட்ட 19 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உத்தரவிட்டார்.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 19 பேருக்கு எதிராக மத்திய அமலாக்கப்பிரிவினர் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. குற்றப்பத்திரிகை மீதான விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், 19 பேர் மீதும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிபதி சைனி இன்று உத்தரவிட்டுள்ளார்.