ஜெயலலிதா கைதால்.. தமிழக முடிதிருத்தும் தொழிலாளிகள் பிஸி!

http://www.appusami.com/Versions/Images/v224tirupathitonsure.jpg
 
சேலம்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருப்பதால் எதிர்க்கட்சிகளுக்கு மகிழ்ச்சியோ இல்லையோ, முடி திருத்தும் தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியே. ஆனால் அவர் சிறையில் உள்ளதை நினைத்து வந்த மகிழ்ச்சி கிடையாது இது. அதிமுக தொண்டர்கள் செய்யும் மொட்டையடிப்பு போராட்டம்தான் இந்த மகிழ்ச்சிக்கு காரணம். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, கடந்த மாதம் 27ம்தேதி முதல் ஜெயலலிதா பெங்களூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவுக்கு விரைந்து ஜாமீன் கிடைக்க வேண்டும், வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதிமுக தொண்டர்கள் பல வகைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.