
பொருளாதாரம், கல்வி மற்றும் சுகாதாரத்தில் ஆண் - பெண்களுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதில், இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக, டபிள்யூ.இ.எப்., எனும் அமைப்பு தெரிவித்துள்ளது. சமூகத்தில், ஆண் - பெண்களுக்கிடையே நிலவும் இடைவெளியின் அடிப்படையில், புள்ளிகள் கணக்கிடப்பட்டு, அதில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலை, டபிள்யூ.இ.எப்., எனப்படும், உலக பொருளாதார அமைப்பு வெளியிட்டு வருகிறது. கடந்த, 2006 முதல் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில், இந்தியா, 114வது இடத்தில் உள்ளது. மொத்தம், 142 நாடுகள் அடங்கிய இந்த பட்டியலில், கடந்த ஆண்டு, இந்தியா, 101வது இடத்தில் இருந்தது. தற்போது, 13 இடங்கள் பின்தங்கி, 114வது இடத்திற்கு சென்றுள்ளது. இந்த பட்டியலில், ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. 2009 முதல் ஐஸ்லாந்து இந்த பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. நார்வே, சுவீடன், டென்மார்க் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. அமெரிக்க, இந்த பட்டியலில், ஐந்தாவது இடத்தில் உள்ளது. 142 நாடுகள் கொண்ட பட்டியலில், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தராத நாடாக, பாகிஸ்தான், 141வது இடத்தில் உள்ளது.