சிங்கப்பூரில் வசித்து வந்தவர் சார்லஸ் ஐசக் சத்தியநாதன் (வயது 47). இந்தியரான இவர் அங்கு கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந்தேதி, ஏற்பட்ட தகராறில், தனது சக ஊழியரும், இந்தியருமான ராஜன் ஆறுமுகம் என்பவரை கத்தியால் சரமாரியாக குத்தி சாய்த்தார்.
அதைத் தொடர்ந்து அவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் நோக்கத்தில், மலேசியாவுக்கு தப்பி ஓடி விட்டார். அங்கு தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார். இந்த நிலையில், அவர் அங்குள்ள குச்சிங் சர்வதேச விமானநிலையத்தில் கடந்த மே மாதம் 28-ந்தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து ராஜன் ஆறுமுகம் கத்தியால் குத்தப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, அவர் சிங்கப்பூருக்கு நாடு கடத்தி கொண்டுவரப்பட்டார்.
வழக்கு விசாரணை முடிவில், அவருக்கு 1½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிபதி விக்டர் இயோ தீர்ப்பு அளித்தார்.