இந்த விமான நிலையத்தில் இருந்து காலையில் சரக்கு விமானம் ஒன்று கிளம்பியது. விமானத்தில் 4 பணியாளர்கள் இருந்தனர். இந்த விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே திடீரென அருகில் இருந்த 2 மாடி வர்த்தக கட்டிடம் ஒன்றில் மோதியது. மோதிய வேகத்தில் விமானம் வெடித்து சிதறியது. விமானத்தின் உடைந்த பாகங்கள் அருகில் இருந்து மற்ற கடைகள் மீது விழுந்தன.
இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 4 பணியாளர்களும் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.