வன விலங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் . பெனிட்டோ ஜுவரஸ் கிராம மக்கள் வயிற்றுப்பகுதி உப்பி பெரியதாக உள்ள நிலையில் மலைப்பாமபை பார்த்து உள்ளனர். குழந்தைகள் எதையாவது உயிரோடு விழுங்கியிருக்கக்கூடும் என சந்தேகம் அடைந்தனர். இதை தொடர்ந்து கிராம மக்கள் பெரிய கட்டைகளால் பாம்பை அடித்து கொன்று தலையை வெட்டி எடுத்து உள்ளனர்.பின்னர் வயிற்று பகுதியை கிழித்து பார்த்து உள்ளனர்.மனிதர்கள் யாரையும் விழுங்கவில்லை இல்லை கன்றுக்குட்டி என்பதை அறிந்தவுடன் அந்த பாம்பை தூக்கி ரயில்வே தண்டவாளம் அருகில் போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
இதுபோன்ற பாம்பு மனிதர்கள் வாழும் கிராமத்து அருகில் வந்தால் அது அங்கு வசிப்பவர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத்து என்பதை அறிந்தே அந்த பாம்பை கொன்றதாக கிராமத்தினர் கூறியுள்ளனர்.