பூடானுக்கு பால் பவுடர், இறைச்சி கொண்டு செல்ல சலுகை

புதுடெல்லி, ஜூன் 16-

பூடானுக்கு பால் பவுடர், இறைச்சி ஆகியவற்றை கொண்டு செல்ல இருந்த தடையை மத்திய அரசு இன்று நீக்கியுள்ளது. அதேபோல், பாசுமதி அரிசியைத் தவிர மற்ற அரிசிகளை கொண்டு செல்ல இருந்த தடையையும் நீக்கி உள்ளது

பிரதமராக பதவி ஏற்றதும் மோடி முதல்முறை வெளிநாட்டுப் பயணமாக பூடான் சென்றுள்ளார். இந்த நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.