பருவநிலையில் மாற்றம்; மலேரியா நோய் அதிகரிப்பு



 தற்போது பருவநிலையில் மாற்றம் இருப்பதால் மலேரியா நோயின்    எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதற்கு நாளுக்குநாள் அதிகரிக்கும் வெப்பநிலையே காரணமாக அமைந்திருக்கிறது. வெப்பநிலை அதிகரிக்கும் போது மலேரியா நோயைக் கொண்டு வரும் அவ்வகை கொசுக்கள் தங்கள் வாழ்விடங்களை மாற்றிக் கொள்கின்றன.
மலேரியா கிருமியை சுமக்கும் இந்த கொசுக்கள் அதிகம் இடம் மாறுவதால் இந்த நோய் விரைவாக பரவும் சாத்தியமும் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் தென்னமெரிக்காவிலும் மலேரியா நோய் பரவும் அறிகுறிகள் தெரிகின்றன என பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இன்னும் குறுகிய காலத்தில் தொடர்ந்து வெப்பநிலை பூமியில் அதிகரித்து வந்தால் மலேரியா நோய் பரவும் வேகமும் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மலேரிய கொசுக்கள் தங்கள் வாழ்விடத்தை உயரமான பகுதிகளுக்கு மாற்றுகின்றன என்ற தகவலையும் அவர்கள் வெளியிட்டனர்.