கரடி பொம்மைக்குள் மண்டை ஓடுகள்: மெக்சிகோ விமான நிலையத்தில் பரபரப்பு


கரடி பொம்மைக்குள் மண்டை ஓடுகள்: மெக்சிகோ விமான நிலையத்தில் பரபரப்புமெக்சிகோ சிட்டி, ஜூன் 23-

மெக்சிகோ சிட்டி விமான நிலைய ஏற்றுமதி நிறுவனத்தில் இன்று நடத்திய சோதனையில் டெடி பியர் எனப்படும் கரடி பொம்மைகளுக்குள் மனித மண்டை ஓடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விமானத்தில் அனுப்பப்படும் பார்சல்கள் நேற்று வழக்கமான சோதனைக்காக எக்ஸ்-ரே எந்திரத்திற்குள் செலுத்தப்பட்டன. அப்போது இரண்டு கரடி பொம்மைகளுக்குள் மண்டை ஓடுகள் இருந்தது தெரியவந்தது. இவை சமீபத்தில் தோண்டி எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் ஆகும்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்நிறுவன ஊழியர்கள் உடனடியாக
காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தி பார்சலை அனுப்பிய நபரை கைது செய்தனர். விசாரணையில், அந்த கரடி பொம்மைகளை மெக்சிகோ சிட்டியில் உள்ள ஒரு பிரபல மார்க்கெட்டில் வாங்கியதாக கூறினார். வெளிநாடுகளில் உள்ள பாரம்பரிய சடங்குகளுக்கு இதுபோன்ற மண்டை ஓடுகள் தேவைப்படுவதாகவும் அந்த நபர் கூறினார்.

ஆனால் அந்த மண்டை ஓடுகளுடன் கூடிய பொம்மைகள் எங்கு அனுப்பப்பட்டன? என்ற விவரத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.