ஈராக், சிரியாவை தொடர்ந்து ஜோர்டான்– லெபனானை குறிவைக்கும் தீவிரவாதிகள்

பெய்ரூட், ஜூன் 24–

ஈராக், சிரியாவை தொடர்ந்து ஜோர்டான் மற்றும் லெபனானை தீவிரவாதிகள் குறி வைத்துள்ளனர்.
ஈராக்கை அதிர வைக்கும் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ தீவிரவாதிகள் அங்கு பல நகரங்களை கைப்பற்றி வருகின்றனர். ஏற்கனவே சிரியாவில் சில நகரங்களும் இவர்கள் பிடியில் உள்ளது. சன்னிபிரிவை சேர்ந்த இவர்கள் அல்–கொய்தா தீவிரவாதிகளின் ஆதரவு பெற்றவர்கள்.



ஈராக் மற்றும் சிரியாவை இணைந்து ‘இஸ்லாமிய நாடு’ என்ற புதிய தேசத்தை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இத்துடன் மேலும் அண்டை நாடுகளையும் இணைக்கவும் முடிவு செய்துள்ளனர்.
தற்போது ஈராக்கின் பெரும்பகுதி இவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. அதையடுத்து ஜோர்டான் மற்றும் லெபனானை தாக்க இவர்கள் குறி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் அவைகளும் கடும் அச்சத்தில் உள்ளன. ஏனெனில், ஈரானில் ஜோர்டான் எல்லையில் உள்ள துராய் நகரை தீவிரவாதிகள் பிடித்தனர். லெபனானில் பெய்ரூட்டில் உள்ள 2 ஓட்டல்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல் பிரிவினர் கைது செய்யப்பட்டனர்.
எனவே, அவர்களின் அடுத்த இலக்கு ஜோர்டான் மற்றும் லெபனான் ஆக இருக்கும் என கருதப்படுகிறது. எனவே, அங்கு ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.