ஜூன் 19-
சமூக வலைதளமான பேஸ்புக் இன்று மதியம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியது. இதனால் பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ஆஸ்ரேலியா முதல் ஹாங்காங், இந்தியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பேஸ்புக் இணையதளம் ஒரு மணி நேரம் முடங்கி காணப்பட்டது. பேஸ்புக் பக்கத்திற்கு சென்றவர்கள் அனைவருக்கும், "தடங்கலுக்கு வருந்துகிறோம்" என்ற செய்தி தான் தெரிந்தது.
இணையதளம் முடங்கியதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. எனினும் குறுகிய காலத்திற்குள் தவறை சரி செய்து, மீண்டும் பேஸ்புக் பயன்பாட்டிற்கு வந்ததாக அதன் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். பேஸ்புக் செயல்படாமல் போனதால் பல்வேறு தரப்பினர் புகைப்படங்களையும், செய்திகளையும், பதிவேற்றம் செய்யமுடியாமல் சிரமப்பட்டனர்.