நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளது: விலைவாசி மேலும் உயர வாய்ப்பு

சென்னை, ஜூன் 16-

கடந்த ஏப்ரல் மாதம் நாட்டின் பணவீக்கம் 5.20 சதவிகிமாக இருந்த நிலையில், அது மே மாதத்தில் 6.01 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர். 
நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளது: விலைவாசி மேலும் உயர வாய்ப்பு

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ள நிலையில், தற்போது பணவீக்க உயர்வும் சேர்த்து நடுத்தர மக்களின் வாழ்க்கை தரத்தை வெகுவாக பாதிக்கும் என கருதப்படுகிறது.

மோடி பிரதமராக பதவியேற்ற பின் நிலைமை சரியாகிவிடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து பணவீக்கத்தை கட்டுப்படுத்தவேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது.