இந்த நிலையில் புகையிலை பயன்பாட்டை முற்றிலும் குறைப்பதற்கான அறிவிப்புகள் நிதி நிலை அறிக்கையில் இடம்பெறும் வகையில் சுகாதாரத் துறை அமைச்சகம் சில அதிரடி பரிந்துரைகளை நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. ஒரு சிகரெட்டின் விலையை ரூ3.50 அளவுக்கு உயர்த்தலாம் என்பதும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அந்த பரிந்துரைகளில் ஒன்று. அதேபோல் 20 லட்சத்துக்கும் குறைவாக பீடி உற்பத்தி செய்வோருக்கான வரி விலக்கை திரும்பபெற வேண்டும் என்பது மற்றொரு பரிந்துரை. இந்த பரிந்துரைகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறுகையில், புகையிலைப் பொருட்கள் என்பது சிகரெட், பீடி, குட்கா ஆகியவைதான். இவற்றால்தான் நோய்கள் அதிகமாக ஏற்படுகிறது. இவற்றின் விலையை மிக அதிகமாக்கிவிட்டால் இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துவிடும். இதனாலேயே இவற்றின் விலையை மிக அதிகபட்சமாக உயர்த்த வேண்டும் என்றார். ஆஹா! இனியும் தம் அடிக்க யோசிப்பீங்களா.. யோசிப்பீங்களா..?