வன்னியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் கே.ஏ.மூர்த்தி என்ற அகோர மூர்த்தி இன்று பகல் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மயிலாடுதுறை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவர், செம்பொனார் கோயில் அருகே வந்தபோது, குறுக்கே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல், நாட்டு வெடிகுண்டுகளை வீசி அரிவாளால் வெட்டினர். இதில், அகோரமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். 6 பேர் கொண்ட மர்ம கும்பல் இதில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் கடையடைப்பு நடத்தப்பட்டுள்ளது